பெண்கள் ராக்கெட்டே விட்டாலும், அவள் பெண் தானே என கருதப்பட்ட நிலையை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்கள் மாற்றியுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். திருச்சியில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் மாணவிகளுக்கு மத்தியில் உரையாற்றிய அவர் இதனை தெரிவித்துள்ளார். எதற்கெடுத்தாலும் சீனாவைப் பாருங்கள் என்று பேசுவது நடைமுறைக்கு ஒத்துவராது எனக் கூறியுள்ள நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி தலைமையில் 2047க்குள் இந்தியாவும் வளர்ந்த நாடாக மாறும் எனத் தெரிவித்துள்ளார்.
Read More »தொடங்கியது ரஷ்ய அதிபர் தேர்தல் – வாக்களித்தார் புதின்
ரஷ்யாவில் நடைபெறும் அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் முயற்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய உக்ரைனுக்கு சரியான பாடம் புகட்டப்படும் என ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்தார். மூன்று நாள் நடைபெறும் அதிபர் தேர்தல் வாக்குப்பதிவின் முதல் நாளில் தலைநகர் மாஸ்கோவில் கிரெம்ளின் மாளிகையில் ஆன்லைன் மூலம் புதின் வாக்களித்தார். நாடு முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவின்போது வாக்குப்பெட்டிக்கு தீவைத்தல், வண்ண மை ஊற்றுதல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்ட வாக்காளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Read More »ரஷ்யாவிற்கு விரைவில் தகுந்த பாடம் புகட்டப்படும் – ஜெலன்ஸ்கி
கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைன் நகரான ஒடேசாவின் குடியிருப்புப் பகுதி மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்படும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். ஒடேசாவின் குடியிருப்பு பகுதி மீது வீசப்பட்ட குண்டுகளால் கட்டடங்கள் இடிந்து 20 பேர் உயிரிழந்தனர், 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஜெலன்ஸ்கி, ரஷ்ய கொலையாளிகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவம் தகுந்த நேரத்தில் கடுமையான தாக்குதல் நடத்தும் என்றார்.
Read More »இலங்கை செய்திகள் 16/03/2024
இலங்கை செய்திகள் 16/03/2024
Read More »இலங்கை செய்திகள் 15/03/2024
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
நாட்டின் சில பகுதிகளில் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்றைய ராசிப்பலன் – 13.03.2024 இலங்கை செய்திகள் 13/03/2024
Read More »இலங்கை செய்திகள் 11/03/2024
இலங்கை செய்திகள் 11/03/2024 இன்றைய ராசிப்பலன் – 11.03.2024 திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
Read More »திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவு
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை திமுக நிறைவு செய்துள்ளது கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு போக, தமிழ்நாட்டில் 21 தொகுதிகளில் திமுக நேரடியாக களம் காண்கிறது திமுக எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை அக்கட்சியின் தலைமை விரைவில் அறிவிக்க வாய்ப்பு
Read More »போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம்
போலீசார் சரியான முறையில் விசாரித்து வருகின்றனர் உள்துறை அமைச்சர் : நமச்சிவாயம் புதுச்சேரியில் சிறுமி கொலை வழக்கில் போலீசார் சரியான முறையில் விசாரணை நடத்தி வருவதாகவும் மக்கள் கோரிக்கையை ஏற்றே காவலர்கள் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்தார். கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக துணைநிலை ஆளுநருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசினார். இன்றைய ராசிப்பலன் – 10.03.2024
Read More »அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார் நிக்கி ஹேலி
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே அறிவித்துள்ளார். இதனால் அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கும் ஜோபைடனுக்கும் நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, தமது பிரச்சாரத்தை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்த நிக்கி ஹேலி, அமெரிக்க மக்களிடம் தனது குரல் எட்ட வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியிருப்பதாகக் கூறினார். குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதில் வருத்தம் ஏதுமில்லை என்றும் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.
Read More »