அமெரிக்காவுககும், சீனாவுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகளில் மோதல் இருந்து வருகிறது. குறிப்பாக தைவான் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை சீனா விரும்பவில்லை. அத்துடன் அந்நாட்டுடன் வர்த்தக ரீதியிலும் பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பைடன் நிருபர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்புகிறது,மோதலை அல்ல. சீனாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற அமெரிக்கா வலுவான நிலையில் உள்ளது.”சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக நாங்கள் நிற்கிறோம், தைவான் பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக நிற்கிறோம். இந்தியாவுடனான கூட்டாண்மைக்கு எங்கள் ஆட்சியில் …
Read More »39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
39 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் சட்டீஸ்கரின் ராஜ்நந்த்காவோன் தொகுதியில் முன்னாள் முதலமைச்சர் பூபேஷ் பகேல் போட்டி ஷிவ்மோகா தொகுதியில் கீதா ஷிவ் ராஜ்குமார் போட்டியிடுவார் என அறிவிப்பு ஷிவ்மோகா தொகுதியில் களமிறங்கும் கீதா பிரபல நடிகர் ஷிவ் ராஜ்குமாரின் மனைவியாவார் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு திருவனந்தபுரம் தொகுதியில் களமிறங்குகிறார் சஷிதாரூர் பெங்களூரு ஊரகத் தொகுதியில் டி.கே. சுரேஷ்குமாரின் சகோதரர் டி.கே. சுரேஷ் போட்டி
Read More »காஸாவில் பஞ்சத்தால் ஒரே வாரத்தில் 20 பேர் பலி
காஸாவில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் உணவின்றி 20 பேர் உயிரிழந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். தரைவழியாக உணவு பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலிய ராணுவம் முட்டுக்கட்டை போடுவதாக பல தொண்டு நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. அங்கு செயற்கையான உணவு பஞ்சம் உருவாக்கப்பட்டு மக்கள் மடிந்துவருவதால், அமெரிக்கா, பிரான்ஸ், பெல்ஜியம், ஜோர்டான், அமீரகம் போன்ற நாடுகள் ராணுவ விமானங்கள் மூலம் உணவு பொருட்களை விநியோகித்துவருகின்றன.
Read More »இன்று மகாசிவராத்திரி விழா கொண்டாட்டம்
மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுவதையொட்டி, நாடெங்கும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாகவும், இதேபோன்று சிவராத்திரி நாளில் பூஜிப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம்! சிவராத்திரி என்பது பல கல்பகோடி இரவுகள் சேர்ந்து வந்த ராத்திரி. பல இரவுகளிலும் செய்கின்ற பூஜையின் பலனை சிவராத்திரி பூஜை …
Read More »அ.தி.மு.கவுடன் கூட்டணி சேர மாட்டோம்
எங்களது உயரம் என்ன என்பது எங்களுக்கு தெரியும், அது திமுகவுக்கும் தெரியும், நிச்சயமாக திமுக கூட்டணியில் தான் இருப்போம் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் நடைபெற்ற 3 மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற பின் பேட்டியளித்த அவர், தி.மு.கவைவிட அதிக இடங்களை ஒதுக்கினாலும் கூட அ.தி.மு.கவுடன் கூட்டணி சேரமாட்டோம் எனவும், போன வேகத்தில் விஜயதரணி மீண்டும் காங்கிரஸிற்கே திரும்பி வருவார் எனவும் தெரிவித்தார். இன்றைய ராசிப்பலன் – 08.03.2024 விமான சேவையை நிறுத்துவதாக ஏர்-பிரான்ஸ் அறிவிப்பு
Read More »விமான சேவையை நிறுத்துவதாக ஏர்-பிரான்ஸ் அறிவிப்பு
சென்னை – பாரிஸ் நேரடி விமான சேவையை மார்ச் மாதத்துடன் நிறுத்தப்போவதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பேரிடருக்கு பின், கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னைக்கு நேரடி விமான சேவையை ஏர் பிரான்ஸ் தொடங்கியது. தங்களது விமான சேவைகளை மேம்படுத்துவதற்காக, இந்த மார்ச்சுடன் சென்னைக்கான நேரடி விமான சேவையை நிறுத்தப்போவதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி
Read More »பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி
புதுச்சேரி மாநிலத்தில் முத்தியால் பேட்டை பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அச்சிறுமியை கழுத்தை நெரித்து படுகொலை செய்து வேட்டியில் மூட்டையாக கட்டி சாக்கடை கால்வாயில் தூக்கி வீசியுள்ள இரக்கமற்ற இதயமற்ற கொடுமை நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து, அம்மாநில திமுக சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என ஆர்.எஸ்.பாரதி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்: பாஜக கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரி …
Read More »உடனே அரசாணை வெளியிடனும் – சீமான்
மகாவீரர் ஜெயந்திக்காக வெகுசன மக்களின் உணவு உரிமையான இறைச்சிக்கடைகளை மூடும் திமுக அரசு, புனித வெள்ளிக்காக உயிரைக் குடிக்கும் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். டாஸ்மாக் கடைக்கு லீவு துக்க நாளாகக் கடைப்பிடிக்கப்படும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என்ற கிறித்துவப் பெருமக்களின் நெடுநாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு ஏற்க மறுப்பது மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அளிப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் மிகக் குறைந்த அளவில் …
Read More »காலநிலை குறித்த அறிவிப்பு!
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினமும் வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, வடமேல், மேல் மற்றும் தென், சப்ரகமுவ மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களில் சில இடங்களிலும் வெப்பநிலை அதிகரித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் இந்த நிலைமை தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்து கொள்வதற்காக போதியளவு நீரை பருகுமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மத்திய வங்கி சேவையாளர்களின் வேதன …
Read More »மத்திய வங்கி சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வாத பிரதிவாதம்!
இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன, மத்திய வங்கி சேவையாளர்களது வேதனம் மற்றும் அதிகரித்த வேதன சதவீதம் என்பவற்றை நாடாளுமன்றில் முன்வைத்ததை அடுத்து வாத பிரதிவாதங்கள் வலுப்பெற்றன. மத்திய வங்கியின் சேவையாளர்களது வேதனம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் நிதி குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். மத்திய வங்கியின் பணியாளர் …
Read More »