ரணிலுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதாக குற்றச்சாட்டு தற்போதைய அரசாங்கம் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கு ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகளினால் எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி ஒருவர் தமது பதவி காலத்தில் எவ்வித தீர்மானங்களையும் மேற்கொள்ள முடியாது. எனவே, …
Read More »சர்வதேச ஊடகங்களில் முக்கிய பேசுப்பொருளாகிய ரணில் கைது
சர்வதேச ஊடகங்களில் முக்கிய பேசுப்பொருளாகிய ரணில் கைது இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை சர்வதேச ஊடகங்களில் முக்கிய செய்தியாக பிரசுரமாகியுள்ளது. இந்திய, அவுஸ்திரேலிய, ஆபிரிக்க, ஐரோப்பிய அமெரிக்க மத்திய கிழக்கு ஊடகங்களில் இந்த செய்தி முக்கிய செய்தியாக பிரசுரமாகியுள்ளது. அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தலைப்பில் இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. அதேநேரம் உலக தலைவர்களை பொறுத்தவரை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், தமது கருத்தை வெளியிட்டுள்ளார். அதுவும் ரணில் விக்கிரமசிங்க கைது …
Read More »ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி
ரணில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மருத்துவ ஆலோசனையின் பேரில் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஜகத் வீரசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு இரண்டு மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு மருத்துவ மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதியாக அவர் பணியாற்றிய காலப்பகுதியில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நேற்று காலை அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் …
Read More »சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில்
சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறை சென்ற ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிறைச்சாலை பேருந்தில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று (22) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் இதுவரை 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம்
Read More »இலங்கை வரலாற்றை மாற்றியமைத்த ரணிலின் வழக்கு – முழுமையான விபரம் ஒரே பார்வையில்
இலங்கை வரலாற்றை மாற்றியமைத்த ரணிலின் வழக்கு – முழுமையான விபரம் ஒரே பார்வையில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித்துறையில் முக்கிய நிகழ்வாக பதிவாகியுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (22) கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான முன்னாள் ஜனாதிபதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு …
Read More »இதுவரை 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம்
இதுவரை 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம் செம்மணி மனித புதைகுழியில், இன்றைய தினம் (29) வரையான காலப்பகுதியில் 33 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து நீலநிற பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்றைய தினம் பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் நான்காம் நாள் பணிகள் …
Read More »பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு பாணந்துறை, பின்வத்த பகுதியில் உள்ள வீடொன்றை குறிவைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உந்துருளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். எனினும், இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர். டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா..
Read More »பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா
பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், ஆண்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும், இதில் கொல்லப்பட்ட சிலரின் வீட்டு பெண்கள் பயங்கரவாதிகள் தங்கள் மதத்தை கேட்டு சுட்டு கொன்றதாகவும், இந்தப் பயங்கரவாத தாக்குதல் பற்றி பிரதமர் மோடியிடம் போய் சொல்லுங்கள் என்று எச்சரித்ததாகவும் பேட்டிகளை கொடுத்தனர். இந்தத் தாக்குதலுக்கு முதலில் லஷ்கர் இ தொய்பாவின் மற்றொரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது. பின்னர் …
Read More »பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?
பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் இடம் கூகுள். தொழில்நுட்ப வளர்ச்சியில், வடதுருவத்தில் நடக்கும் ஒரு விஷயம் தென்துருவத்தில் அடுத்த சில நிமிடங்களில் கொடுத்துவிடுகிறது கூகுள். அப்படிதான் இன்று இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் செந்தூர்’ பற்றியத் தேடல் கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. தேடிய நாடு பாகிஸ்தான். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (7ஆம் தேதி) அதிகாலை 1.05 மணியில் இருந்து 1.30க்குள் இந்திய ராணுவம் …
Read More »2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்
கொழும்பு மாவட்டம் – சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள். தேசிய மக்கள் சக்தி – 5,553 வாக்குகள் – 11 ஆசனங்கள். ஐக்கிய மக்கள் சக்தி -4,025 வாக்குகள் -6 ஆசனங்கள். சுயேட்சை குழு 2 – 2,457 வாக்குகள் – 4 ஆசனங்கள். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 889 வாக்குகள் – 1 ஆசனம். ஜக்கிய தேசிய கட்சி -574 வாக்குகள் – 1 ஆசனம். அனுராதபுரம் மாவட்டம் – …
Read More »