முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாண அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்

அதிபர் – ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாட்டை நீக்க வலியுறுத்தி இன்று (12) தென்மராட்சி வலயக்கல்விப் பணிமனை முன்பாக தென்மராட்சி கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர் – ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது ” சுபோதினி ஆணைக்குழுவின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு சம்பள உயர்வை வழங்கு, மாணவர்களுக்கான போசாக்கு நிலையை உறுதிப்படுத்து, பெற்றோர் மீது சுமையை அதிகரிக்காதே, அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கு,அதிபர் ஆசிரியர்களை ஏமாற்றாதே மற்றும் பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்துக” உள்ளிட்ட சுலோகங்கள் அடங்கிய பதாகைகளை …

Read More »

ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலை

ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலை குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரை 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய குளியாப்பிட்டிய நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது. வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆசிரியையின் புகைப்படத்தை மீண்டும் ஆபாசமாக சித்தரித்தால் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்படும் …

Read More »

நச்சு வாயு கசிவு…… 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

இரசாயன நச்சு வாயுவை சுவாசித்த 30 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாணந்துறை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள அழகுசாதன உற்பத்தி தொழிற்சாலை ஒன்றிலேயே இடம்பெற்றள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அழகுசாதன உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில், பொருட்களுக்கான கலவைகளை மேற்கொள்ளும் போதே இந்த இரசாயன கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல், தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. 2023 (2024) ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு   தீர்மானித்துள்ளது. அதன்படி நேர்முகப் பரீட்சைக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. மூன்று வருடகால சேவை முன் கற்பித்தலில் தேசிய டிப்ளோமா பாடநெறியைப் பயிலுவதற்காக மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். 2021 ஆம் ஆண்டு மற்றும் 2022 ஆம் ஆண்டு க.பொ.த. உயர் தரப் பெறுபேற்றின் அடிப்படையில் பயிலுநர்களின் இரு தொகுதியினர் ஒரே …

Read More »

சிறிலங்கன் எயார்லைன்ஸில் நிறுத்தப்பட்ட உணவு வகை, காரணம் இதுதான்.

சிறிலங்கன் எயார்லைன்ஸ் கடந்த வருட இறுதியிலிருந்து தனது விமானங்களில் வணிக வகுப்பு (Economy class) பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கு மிளகு மற்றும் உப்பு பொதிகளை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, சிறிலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் சிறிய பொதிகளில் மிளகு மற்றும் உப்பை வழங்கியது, ஆனால் வணிக வகுப்பு பயணிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் உணவில் இருந்து உப்பு மற்றும் மிளகு ஆகியவற்றை நீக்க விமான நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், வணிக வகுப்பில் பயணிக்கும் பெரும்பாலான பயணிகள் மிளகு, உப்பு …

Read More »

நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன்

நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்த கணவன் கொழும்பு தலஹேன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கணவன் தனது நண்பருடன் இணைந்து மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். 31 வயதுடைய மனைவியை கொலை செய்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த 31 வயதுடைய பெண் தனது கணவருடன் வாடகை அடிப்படையில் வீடொன்றில் வசித்து வருவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் ஹிகுரக்கொட பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான உயிரிழந்த பெண்ணின் கணவரும் கலேவெல பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய மற்றைய சந்தேக நபரும் …

Read More »

க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம்

க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டம் இவ்வருடத்திற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை செப்டெம்பர் மாதம் நடத்த முடியும். பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுக்க பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்து, பல்கலைக்கழக …

Read More »

சஜித்துடன் இணைய முயற்சிக்கும் அரசியல் தலைமைகள்

சஜித்துடன் இணைய முயற்சிக்கும் தலைமைகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய, டலஸ் அழகப்பெரும , தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷன் ரணசிங்க தலைமையிலான அரசியல் குழுக்களே குறித்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர், அதிலிருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

இலங்கைக்கு 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம்

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் கீழ் இலங்கைக்கு 3655 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் நிவாரணம் கிடைக்கும் என கருதப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். அதன்போது, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை ஈடுசெய்ய சர்வதேச நாணய நிதியம் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதகவும், உலக வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களையும், ஆசிய அபிவிருத்தி …

Read More »

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, 2025 வரவு செலவு திட்டத்தில் தீர்வு

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு, 2025 வரவு செலவு திட்டத்தில் தீர்வு 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரச துறையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்கு மேலதிக நிதி ஆதாரங்களை ஒதுக்குவதற்கு அரசாங்கத்தினால் தற்போது முடியவில்லை என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (PMC) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். இதனடிப்படையில், அரசாங்க திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டப்பூர்வ அமைப்புகளுக்குள் உள்ள முரண்பாடுகள் உட்பட சம்பளம் தொடர்பான பிரச்சினைகளுக்கு …

Read More »