முக்கிய செய்திகள்

முக்கிய செய்திகள்

குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் பெண் படுகொலை

குருணாகல் மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளார். மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றினுள் கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலைச் செய்யப்பட்டுள்ளதாக தகவ்லல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர் 62 வயதுடைய பெண் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

உளூராட்சி சபை தேர்தல் மீதான வழக்கு ஒத்திவைப்பு

உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பான வழக்கின்  தீர்ப்பு அறிவிப்வை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் 9 ஆம் திகதி நடைபெற இருந்த உள்ளுராட்சி சபை தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட மனு மீதான விசாரணையை முடித்து வைத்தே இந்த உத்தரவிட்டுள்ளது.

Read More »

சிறுவனைக் கொடூரமாகத் தாக்கிய நபர் கைது!

மணலாறு பகுதியில் சிறுவன் ஒருவர் மீது கொடூரமாகத் தாக்குதல் நடத்தும் காணொளியுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் உணவு உட்கொண்டிருந்த 4 வயது சிறுவன் ஒருவரை நபர் ஒருவர் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. இந்த நிலையில் குறித்த சிறுவன் மீது தாக்குதல் நடத்திய ஆண் உட்பட மூன்று பேர் புல்மோட்டை – அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மணலாறு காவல்துறையினர் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் மற்றும் முல்லைத்தீவு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த …

Read More »

வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இளைஞர் சடலமாக மீட்பு.

அதிக மழையினால் வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட தவலம பகுதியைச் சேர்ந்த இருவரில் 23 வயதான இளைஞர் சடலமாக மீட்கப்பட்டுள்ளர். மற்றுமொருவரை தேடும் பணிகள் தொடர்ந்து வருவதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

Read More »

பொடி மெனிகே ரயிலின் எஞ்சின் தீப்பிடித்தது

பொடி மெனிகே ரயிலின் எஞ்சின் தீப்பிடித்தது கொழும்பு, கோட்டை  நிலையத்தில் இருந்து பதுளையை நோக்கி பயணித்த பொடிமெனிக்கே ரயிலின் எஞ்சின், ஹப்புத்தளை ரயில் நிலையத்தில் வைத்து தீப்பிடித்தது. தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையினை, ரயில்வே திணைக்களத்தினர், தீயணைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Read More »

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை குறைப்பு! நாளை (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். திருத்தப்பட்ட விலைகள் நாளை அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

தோட்ட தொழிலாளர்களுக்கு 1700 சம்பளத்தை உறுதி செய்த வர்த்தமானி

தோட்டத்தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான வர்த்தமானியை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்க முடியாதென மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை வலுவிழக்கச் செய்வதற்கான எழுத்தானை உத்தரவை பிறப்பிக்குமாறு தோட்டக் கம்பனிகள் பல மனுவை தாக்கல் செய்திருந்தன. மனு மீதான தீர்ப்பை வெளியிடும் வகையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வழக்கின் பிரதிவாதிகள் எதிர்வரும் 26ம் திகதி விடயங்களை முன்வைக்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டது. தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 1700 ரூபா என நிர்ணயித்தே இந்த வர்த்தமானி அறிவித்தல் …

Read More »

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் நாளைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது

Read More »

தலவாக்கலையில் ஈரான் ஜனாதிபதிக்கு ஆத்ம சாந்திப் பிராத்தனை

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் ஆத்ம சாந்திக்கான பிராத்தனை நிகழ்வு தலவாக்கலை பிரதான ஜும்மா மஸ்ஜிதில் நேற்று (31) இடம்பெற்றது..

Read More »

தென்மராட்சி மண்ணின் பெருமை மதியழகன் டினோஜன்

யாழ்ப்பாண மாவட்டத்தில் மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரி மாணவன் மதியழகன் டினோஜன் முதலிடத்தைப் பெற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். குறித்த மாணவன் அகில இலங்கை மட்டத்தில் 47 வது நிலையை பெற்று தென்மராட்சி மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

Read More »