இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் (SLRCS) பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஷ் குணசேகர, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவை (ஓய்வு) திங்கட்கிழமை (பெப்ரவரி 03) அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்தக் சந்திப்பின் போது, நாடு முழுவதும் செஞ்சிலுவைச் சங்கத்தினால் மேற்கொள்ளப்படும் மனிதாபிமான செயற்பாடுகள், குறிப்பாக பேரிடர் மீட்பு, சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் சமூக மீளமைப்பு திட்டங்கள் குறித்து கலாநிதி குணசேகர பிரதி அமைச்சருக்கு விளக்கமளித்தார். குறிப்பாக …
Read More »நாடு முழுவதும் சீரான வானிலை!
நாடு முழுவதும் சீரான வானிலை! காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அந்தவகையில், காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை, மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் சிறிதளவான மழைவீழ்ச்சி காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாகச் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களின் சில இடங்களிலும் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகத் …
Read More »இடைநிறுத்தப்பட்டிருந்த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் !
இடைநிறுத்தப்பட்டிருந்த பரீட்சைகள் மீண்டும் ஆரம்பம் ! பரீட்சைக்கு முன்னதாக வினாக்கள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், காலவரையறை இன்றி இடைநிறுத்தப்பட்டிருந்த வடமத்திய மாகாணத்திலுள்ள தரம் 11 க்கான தவணை பரீட்சைகள் மீண்டும் இன்று முதல் எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பௌத்தம் மற்றும் தமிழ் பாடங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பாடங்களும் இன்று முதல் நடைபெறவுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச்செயலாளர் சமன்குமார எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார். அத்துடன், இந்த பரீட்சைக்கான வினாத்தாள்கள் வடமத்திய மாகாணத்தில் உள்ள கோட்டக்கல்வி அலுவலகங்களில் களஞ்சியப்படுத்தப்பட்டு …
Read More »பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்!
பாடசாலை மட்டத்திலும் முன்னெடுக்கத் தீர்மானம்! க்ளீன் ஸ்ரீலங்கா திட்டத்தைப் பாடசாலை மட்டத்திலும் முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கல்வித்துறையைச் சேர்ந்தவர்களைப் பயிற்றுவிப்பதற்கான நிகழ்ச்சி திட்டம் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் இடம்பெற்றது. சுகாதாரம், கழிவு முகாமைத்துவம், மாணவர்களின் நடத்தை மற்றும் ஒழுக்கம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு குறித்த நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்குத் தேவையான பயிற்சிகள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட கல்வித்துறைசார் பணியாளர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவை …
Read More »மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று!
மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியை இன்று! இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தமது 82ஆவது வயதில் கடந்த புதன் கிழமை இரவு காலமானார். தலையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்குச் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் அவர் காலமானார். இந்தநிலையில், மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடலுக்கு …
Read More »வானிலை குறித்த அறிவித்தல்!
வானிலை குறித்த அறிவித்தல்! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று (2) முதல் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனினும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், இரத்தினபுரி, காலி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் …
Read More »அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க தவறிவிட்டது – சஜித் !
அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க தவறிவிட்டது – சஜித் ! தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கான சலுகைகள் தொடர்பில் அதிகம் பேசிய தேசிய மக்கள் சக்தி தற்போது நெல்லுக்கான உத்தவாத விலையைக் கூட நிர்ணயிக்க தவறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார். குருநாகல் – ஹிரியால பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகியுள்ளன. எனினும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாது போயுள்ளது. பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – …
Read More »ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற எழுத்து மூலம் அறிவிக்கப்படாது
ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற எழுத்து மூலம் அறிவிக்கப்படாது – சுனில் வட்டகல! முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கான எழுத்துப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்படாது எனவும், அதற்காக ஒரு சட்டத்தை கொண்டுவருவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார். க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் தொடர்புடைய நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் கொழும்பில் இன்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது மஹிந்த ராஜபக்ஷவுக்கு குறித்த இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு போதிய …
Read More »பேருந்து பயணக் கட்டணத்தில் திருத்தமில்லை-பேருந்து உரிமையாளர்கள் சங்கம்
அரசாங்கம் எதிர்க்கட்சியில் இருந்த போது கூறிய விதத்தில் எரிபொருள் விலையை குறைக்கவில்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அந்த சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார். பெற்றோலின் விலையை அதிகரிக்காமல் இருந்தமையை நாம் வரவேற்கின்றோம். முன்னாள் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவினால் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்துக்கு அமைய தற்போது எரிபொருள் விலையை குறைக்க முடியாதென ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தற்போது கூறுகின்றது. எனவே, எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும் பரவாயில்லை, குறைக்கப்பட்டாலும் பரவாயில்லை …
Read More »போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை!
போக்குவரத்து விதிகளை மீறிய 31,905 வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 11 ஆம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாடுமுழுவதும் உள்ள 607 காவல் நிலையங்களில் உள்ள காவல்துறையினரால் குறித்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது மது அருந்திவிட்டு வாகனம் செலுத்திய குற்றத்தின் கீழ் 3,876 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் . மேலும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றத்தில் …
Read More »