நாட்டில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளை (02) முதல் குறைவடையுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை, மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக்கூடும். அத்துடன் மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. …
Read More »சஜித்தும் ரணிலும் விரைவில் சந்திப்பு
சஜித்தும் ரணிலும் விரைவில் சந்திப்பு எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். கம்பஹாவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணாவின் இல்லத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எனினும், தொடர்ந்து இரு கட்சிகளும் இணைந்து செயற்படுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டுக்கு வரவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விரைவில் அதற்கான இணக்கம் ஏற்படும் அதேநேரம், சின்னம் தொடர்பில் எந்த …
Read More »பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் தீப்பரவல்!
கொழும்பு துறைமுகத்தின் பண்டாரநாயக்க முனையத்தில் உள்ள கொள்கலன் ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக அதன் ஒரு பகுதி முற்றாக எரியுண்டுள்ளது. நேற்றிரவு 7.45 அளவில் குறித்த பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டது. இந்த தீப்பரவலை கொழும்பு துறைமுக தீயணைப்புத்துறையினர் மற்றும் கடற்படையினர் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலே தீப்பரவல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Read More »அர்ச்சுனாவுக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ள காவல்துறையினர்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி முன்வைத்த முறைப்பாடு தொடர்பில் காவல்துறையினர் இன்றைய நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைக்கவுள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் முறைப்பாடளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு அமைய, தங்களது சமர்ப்பணங்களை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் முன்வைக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் …
Read More »க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் நேற்று இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார். இதன்படி, கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சைகள் டிசம்பர் 4 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி வரையான 6 நாட்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 21ஆம் …
Read More »அர்ச்சுனா MPயின் பிடியாணை இரத்து!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (28) நீதிமன்றில் முன்னிலையான நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – பேஸ்லைன் வீதியில் அர்ச்சுனா, கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் திகதி இன்னுமொரு மகிழுந்துடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதுடன், வாகன சாரதியைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு கடந்த 26ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சந்தேகத்திற்குரிய நாடாளுமன்ற …
Read More »இதுவரை வெளியான பெறுபேறுகளின் படி தேர்தல் முடிவுகள்!
2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியான பெறுபேறுகளின்படி, தேசிய மக்கள் சக்தி – 123 ஆசனங்கள் ஐக்கிய மக்கள் சக்தி – 31 ஆசனங்கள் புதிய ஜனநாயக முன்னணி – 3 ஆசனங்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2 ஆசனங்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி – 6 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி – 1 ஆசனம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 1 ஆசனம் மற்றும் ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி – 1 ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.
Read More »சுன்னாகத்தில் காடையார் போலீஸ் நிறுவாகிகள் இரண்டு மாத குழந்தையை பாற்றைக்குள் எறிந்து இருக்கின்றார்கள்
சுன்னாகத்தில் காடையார் போலீஸ் நிறுவாகிகள் இரண்டு மாத குழந்தையை பாற்றைக்குள் எறிந்து இருக்கின்றார்கள் மயிலிட்டியில் இருந்து சுன்னாகம் வந்து கொண்டு இருந்த குடும்பத்தினரை வந்து கொண்டு இருந்த நேரம் முன்னால் மோட்டார்சைக்கிள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி குடும்பத்தினர் வாகனத்துடன் மோதியுள்ளது. அங்கு வந்த சிவில் போலீசார் குடும்பதலைவனிடம் ஓட்டுனர் அட்டை கேட்டபொழுது தரமறுத்தால் வாக்குவாதம் கைகலப்பாகமாறியது. கணவனை காப்பாற்ற வந்த பெண்மீதும் அவரது அக்கா மீதும் இரும்பு பைப்பை கொண்டு அடித்துதுள்ளனர். கையில் இருந்த இரண்டுமாத கைகுழந்தையை பிடித்து பற்றைக்குள் எறிந்துள்ளனர் பொலிஸ்காடையார்.
Read More »இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News
இலங்கையின் முக்கிய செய்திகள் – 10.11.2024 | Sri Lanka Tamil News இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்
Read More »மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்து படகு மூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!
மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்து படகு மூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை! தமிழகம் மண்டபம் ஏதிலிகள் முகாமிலிருந்து 9 பேர் படகு மூலம் நேற்று மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர். நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் படகு மூலம் நேற்று மாலை வந்தடைந்தவர்கள், திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அனைவரும் மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை, மன்னார் …
Read More »