Wednesday , 8 October 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இலங்கையின் முக்கிய செய்திகள் – 09.10.2024 | Sri Lanka Tamil News

இலங்கையின் முக்கிய செய்திகள்

இலங்கையின் முக்கிய செய்திகள் – 09.10.2024 | Sri Lanka Tamil News

Read More »

நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிப்பு!

நிலந்த ஜயவர்தன

நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகள் வழக்கிலிருந்து விடுவிப்பு! ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் உயர்நீதிமன்றம் விதித்த சகல இழப்பீட்டுத் தொகையையும் செலுத்தி முடித்ததன் காரணமாக அரச புலனாய்வு சேவை முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தன உள்ளிட்ட பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவிப்பதாக உயர்நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது. சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன செலுத்திய வேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையினையும் செலுத்தியுள்ளதன் காரணமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் போதியளவான புலனாய்வு தகவல் …

Read More »

சதிகள் முறியடிக்கப்படும் – சஜித்

சஜித்

அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகள் ஊடாக பதவியைத் தக்கவைத்துக்கொள்ள தற்போதைய ஜனாதிபதிக்கு வாய்ப்பில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கம்பஹாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அரசியலமைப்பில் உள்ள ஓட்டைகளை ஆராய்வதை தற்போதைய ஜனாதிபதியின் சீடர்கள் கடமையாகக் கொண்டு செயற்பட்டு வருகிறார். அவருக்கு மக்களாணை என்பது கிடையாது. அவர் திருடர்களைப் பாதுகாக்கும் பணிகளையே முன்னெடுத்துள்ளார். சிலருக்கு அதிகாரம் இல்லாமல் உறக்கம் வருவதில்லை. அவ்வாறானவர்கள் பல சதிகளை முன்னெடுத்து ஆட்சியைத் தக்க வைக்க …

Read More »

அனைவரின் ஆதரவும் அவசியம் – ஜனாதிபதி

ஜனாதிபதி

நாட்டைப் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்பும் வேளையில் சிலர் அதனைச் சீர்குலைக்க முயற்சிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அரச சேவையாளர்களுக்கு இந்த வருடத்தில் மீண்டும் சம்பள அதிகரிப்பு வழங்க முடியாது. ஆனால் 2025 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்க முடியுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, நாடு பொருளாதார அச்சுறுத்தலிலிருந்து மீண்டுவரும் வேளையில் போதைப்பொருளின் அச்சுறுத்தலிலிருந்து நாட்டைக் காப்பாற்றுவதற்கு அனைவரின் ஆதரவும் அவசியமாகும். எதிர்கால சந்ததியினர் போதை பாவனைக்குப் பலியாகும் பட்சத்தில், நாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் …

Read More »

மழையுடனான வானிலை!

மழையுடனான வானிலை!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான நிலைமை எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி இன்று (08) மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. …

Read More »

சாவகச்சேரி வைத்தியசாலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

சாவகச்சேரி

சாவகச்சேரி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து இடமாற்றுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியின் காரணமாக வைத்தியசாலை வளாகத்தில் நேற்றிரவு பதற்றம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் இரவு முதல் பொதுமக்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டிருந்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகரை அங்கிருந்து இடமாற்றம் செய்வதற்கான சுகாதார அமைச்சின் உத்தரவு கடிதம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வட மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரன நேற்று இரவு குறித்த கடிதத்தைப் பதில் வைத்திய அத்தியட்சகருக்கு வழங்க முற்பட்டுள்ளார். அதனைக் குறித்த …

Read More »

பாடசாலைகளை வகைப்படுத்தக் கூடாது – சஜித்

சஜித்

சமூக வகுப்புகளின் அடிப்படையில் பாடசாலைகளை வகைப்படுத்தக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 294 ஆவது கட்டத்தின் கீழ் மாத்தறை பகுதியில் உள்ள பாடசாலையொன்றுக்கு 11 இலட்சத்து 77 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். பொறுப்பானர்கள் கூறும் கருத்துகளின் மீது நம்பிக்கை வைக்க முடியாது எனப் பெரும்பாலான மக்கள் கூறிவருகின்றனர். சிலர் அதிகாரத்தைத் தங்களது கைகளில் வைத்துக் கொண்டு தமக்கு ஏற்றவாறு ஆட்சி செய்து வருகின்றனர். ஆட்சி அதிகாரத்தை …

Read More »

வன்முறை சம்பவங்கள்- யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

வன்முறை சம்பவங்கள்- யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன், இந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐந்து பேரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், வர்த்தக நிலைய தீ வைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 24 வயதான சந்தேகநபரே இவ்வாறு …

Read More »

மீன்பிடிக்க சென்ற இருவர் மாயம்

அனலைத்தீவு கடற் பகுதியிலிருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு மீனவர்களை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More »

மின்சாரம் தாக்கி மாணவி உயிரிழப்பு

பாதுகாப்பற்ற முறையில் மின் இணைப்பைப் பெற முற்பட்ட 17 வயதுடைய நுகேகொட மஹாமாயா பெண்கள் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் உயிரிழப்பு, மாணவியின் பிரேத பரிசோதனை களுபோவில போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர் .

Read More »