உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று மற்றும் இன்று ஆகிய இரு தினங்கள் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மேலும், எதிர்வரும் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read More »உள்ளூராட்சி தேர்தலில் வாக்களித்த ஜனாதிபதி
நடைபெற்றுக் கொண்டிருக்கும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். கொழும்பு பஞ்சிகாவத்த அபே சுந்தரராமய விகாரையில் அவர் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.
Read More »கட்டுநாயக்க பகுதியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு
கட்டுநாயக்க பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கி சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக சீதுவ விஜயகுமாரதுங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Read More »யாழில் இதுவரை பதிவான வாக்கு சதவீதம்
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யாழ். மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, யாழ். மாவட்டத்தில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Read More »உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – மதியம் 12 மணி நிலவரப்படி பதிவான வாக்குகளின் சதவீதம்
2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பில் மதியம் 12 மணிவரையிலான நிலவரப்படி , அனுராதபுரம் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் , பொலன்னறுவை மாவட்டத்தில் 34 சதவீத வாக்குகளும், திருக்கோணமலை மாவட்டத்தில் 36 சதவீத வாக்குகளும், புத்தளம் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் பதிவு செய்யபட்டுள்ளன. அத்துடன், பதுளை மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும், கொழும்பு மாவட்டத்தில் 28 சதவீத வாக்குகளும், காலி மாவட்டத்தில் 35 சதவீத வாக்குகளும், குருநாகல் மாவட்டத்தில் 30 சதவீத வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாத்தறை மாவட்டத்தில் …
Read More »இலங்கையில் இன்று 1 கிராம் தங்கத்தின் விலை.., எவ்வளவு தெரியுமா? (05-05-2025)
இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (05-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 980,475.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 34,590.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 276,700.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 31,710.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 253,700.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …
Read More »பெயரை மாற்றிக் கொண்ட அர்ஜூன் மகேந்திரன்! அநுர வெளியிட்ட தகவல்
இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன்(Arjuna Mahendran) தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் இவ்வாறு பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றம் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வியட்நாம் விஜயத்திற்கு முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அர்ஜுன் மகேந்திரனின் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு …
Read More »விடுதலை புலிகளிடமிருந்த நகைகள் அரசு முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும்!
விடுதலை புலிகள் அமைப்பினரிடமிருந்த நகைகள் அரசுக்கு கிடைத்துள்ளமை ஜனாதிபதி அநுர குமார அரசுக்கு கிடைத்த வெற்றியாகும் என்பதுடன் இந்த நகைகளில் அதிகமானவை வடக்கு முஸ்லிம்களிடமிருந்து புலிகளால் பறிக்கப்பட்டவை என்பதால் அந்த நகைகளை அரசு முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸ் அரசை கோரியுள்ளது. இது பற்றி உலமா கட்சித்தலைவரும் ஐக்கிய காங்கிரஸ் ஸ்தாபக தலைவருமான முபாறக் அப்துல் மஜீத் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே மேற்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 1990 ஆம் ஆண்டு வடக்கில் தமிழ் மக்களுடன் …
Read More »வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (4) காலை வியட்நாமை சென்றடைந்தார். வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று முதல் மே 6ஆம் திகதி வரை வியட்நாமில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தின் போது, …
Read More »NPP வேட்பாளர் யாழ். மேயராக கூட ஆக முடியாது; வந்தால் அடித்து விரட்டுவோம்!
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். NPP வேட்பாளர் உறுப்பினராக வந்தாலே வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார். யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை …
Read More »