Thursday , 9 October 2025

இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்று 1 கிராம் தங்கத்தின் விலை.., எவ்வளவு தெரியுமா? (05-05-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (05-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 980,475.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 34,590.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 276,700.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 31,710.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 253,700.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …

Read More »

பெயரை மாற்றிக் கொண்ட அர்ஜூன் மகேந்திரன்! அநுர வெளியிட்ட தகவல்

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன்(Arjuna Mahendran) தனது பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் வசித்து வரும் அர்ஜூன் மகேந்திரன் இவ்வாறு பெயரை மாற்றிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த பெயர் மாற்றம் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சட்ட சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். வியட்நாம் விஜயத்திற்கு முன்னதாக தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். அர்ஜுன் மகேந்திரனின் பெயர் மாற்றம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு …

Read More »

விடுத‌லை புலிகளிடமிருந்த ந‌கைக‌ள் அர‌சு முஸ்லிம்க‌ளுக்கு வழங்க வேண்டும்!

விடுத‌லை புலிகள் அமைப்பினரிடமிருந்த ந‌கைக‌ள் அரசுக்கு கிடைத்துள்ள‌மை ஜ‌னாதிப‌தி அநுர‌ குமார‌ அர‌சுக்கு கிடைத்த‌ வெற்றியாகும் என்ப‌துட‌ன் இந்த‌ நகைகளில் அதிக‌மான‌வை வடக்கு முஸ்லிம்களிட‌மிருந்து புலிக‌ளால் ப‌றிக்க‌ப்ப‌ட்ட‌வை என்ப‌தால் அந்த‌ நகைகளை அர‌சு முஸ்லிம்க‌ளுக்கு வழங்க வேண்டும் என‌ ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌ஸ் அர‌சை கோரியுள்ள‌து. இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் ஐக்கிய‌ காங்கிர‌ஸ் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் ஜ‌னாதிப‌திக்கு அனுப்பி வைத்துள்ள‌ க‌டித‌த்திலேயே மேற்ப‌டி கோரிக்கை விடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அதில் மேலும் தெரிவிக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாவ‌து, 1990 ஆம் ஆண்டு வ‌ட‌க்கில் த‌மிழ் ம‌க்க‌ளுட‌ன் …

Read More »

வியட்நாம் சென்றடைந்தார் ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (4) காலை வியட்நாமை சென்றடைந்தார். வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் அமைந்துள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று முதல் மே 6ஆம் திகதி வரை வியட்நாமில் தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், குறித்த இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த விஜயத்தின் போது, …

Read More »

NPP வேட்பாளர் யாழ். மேயராக கூட ஆக முடியாது; வந்தால் அடித்து விரட்டுவோம்!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல, யாழ். மாநகர சபையின் உறுப்பினராகக் கூடப் பதவி வகிக்க முடியாது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். NPP வேட்பாளர் உறுப்பினராக வந்தாலே வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் கூறினார். யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை …

Read More »

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் என்ன தெரியுமா? (02-05-2025)

இலங்கையில் இன்றைய தங்க நிலவரம் (02-05-2025) என்னவென்று தெரிந்து கொள்வோம். தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 974,398.00 ஆகும். 24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 34,380.00 24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 275,000.00 22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 31,520.00 22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 252,150.00 21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் …

Read More »

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 1 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் …

Read More »

மகிந்தவின் பாரிய மோசடி.! அம்பலப்படுத்திய அறிக்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவின் வாசஸ்தலத்தை புனரமைப்பதற்கான செயற்பாடுகளில் 55 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌சவுக்கு வழங்கப்பட்டுள்ள விஜேராம இல்லத்தை புனரமைப்பதற்காக கடந்த 2021ஆம் ஆண்டின் ஒக்டோபர் மாதம் 06ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன் பின் எந்தவித கேள்வி கோரலும் இன்றி, ஒப்பந்தக்காரர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதுடன் புனரமைப்பு வேலைகளுக்காக சுமார் 119 கோடி 62 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில் 55 கோடியே 70 லட்சத்து 30 ஆயிரம் ரூபா …

Read More »

இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாட்டுக்கு ஆபத்து காத்திருக்கிறது: சஜித் விடுக்கும் எச்சரிக்கை

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, 2028 ஆம் ஆண்டில் இலங்கையின் கடன்களை திருப்பிச் செலுத்தும்போது இலங்கை ஆபத்தை எதிர்நோக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று கருத்துரைத்த அவர், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான முன்னைய அரசாங்கம், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரப் புள்ளியாகப் பயன்படுத்துவதற்காக, 2033 வரை நீடிப்பு பெறும் சாத்தியம் இருந்தபோதிலும், 2028 ஆம் ஆண்டில் கடன் திருப்பிச் செலுத்தும் செயல்முறையை ஆரம்பிக்க ஒப்புக்கொண்டதாக, …

Read More »

உயர்தர பெறுபேறுகளில் வடக்கு மாகாணத்தில் முதலிடம் பிடித்த வலயம்

வெளியாகிய 2024ஆம் ஆண்டு உயர்தரப் பெறுபேற்றில் வடக்கு மாகாணத்தில் வவுனியா வடக்கு வலயம் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் 12 கல்வி வலயங்களில் இருந்தும் பரீட்சைக்கு முதல் தடவை தோற்றி சித்தி பெற்றவர்களின் வீதத்தை அடிப்படையாக கொண்டு வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பகுபாய்வு அறிக்கையிலேயே இந்த விடயம் வெளியாகியுள்ளது. அதன்படி, வடக்கு மாகாணத்தின் 12 கல்வி வலயங்களில் வவுனியா வடக்கு வலயத்தில் இருந்து முதல் தடவையாக 253 மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய நிலையில், 189 பேர் சித்தி …

Read More »