வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எனவும் அவர் சில மாதங்களில் ஜனாதிபதியாக வருவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. அப்போது அதை மீண்டும் யார் கட்ட முடியும் என்பதை மக்கள் நினைவில் கொள்வார்கள். கோத்தபய இரவில் குழியில் விழுந்தார். பகலில் அனுர குழியில் விழுந்தார். காலையில் சஜித்துடன் விழத் தயாராக இருக்கும் மூளை உள்ளவர்கள் இலங்கையில் யாரும் …
Read More »கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு !
கட்டுநாயக்க, ஆடியம்பலம, தெவமொட்டாவ பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று (22) காலை 9.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், வீடு ஒன்றிற்குள் நுழைந்து T-56 துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தின்போது, துப்பாக்கி செயலிழந்ததால் ஒருவர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். மற்றவர் வீட்டிற்குள் சிக்கிக்கொண்ட நிலையில், அவர் தடுப்புச் சுவரில் ஏறி தப்பிக்க முயன்ற போது தவறி விழுந்து இரு கால்களும் முறிந்து படுகாயமடைந்துள்ளார். அந்த நேரத்தில், …
Read More »“எனது சட்டத்தரணி வரும் வரை காத்திருக்கவும்” – ரணில்
வெளிநாடு சென்றுள்ள தமது சட்டத்தரணி நாடு திரும்பியதன் பின்னர், கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாவதாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவின் கைது தொடர்பாக வெளியிட்ட கருத்து ஒன்றுக்காக வாக்குமூலம் பெறும் நோக்கில் ரணில் விக்ரமசிங்கவை கடந்த 17ஆம் திகதி கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைத்திருந்தது. எனினும் புத்தாண்டு காலப்பகுதியில் தமக்கு சமூகமளிக்க முடியாது என்றும் பிறிதொரு தினத்தை வழங்குமாறும் ரணில் கோரியிருந்தார். அதன்படி அவரை எதிர்வரும் 25ஆம் திகதி முன்னிலையாகுமாறு …
Read More »NPP உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்களை ஏமாற்ற தயாராகி வருகிறது – சஜித்
ஜனாதிபதித் தேர்தலில் மக்களை ஏமாற்றிய தேசிய மக்கள் சக்தி, தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் மக்களை ஏமாற்றுவதற்குத் தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பெலியத்த தேர்தல் தொகுதியில் நடைபெற்ற பிரதேச மட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளை வழங்கும் அரசியலால் இன்று வளமான நாட்டையும் அழகான வாழ்க்கையையும் உருவாக்கும் நடவடிக்கை சீரழிந்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல்களில் பொய் மற்றும் ஏமாற்று வேலைகளைச் …
Read More »பிள்ளையானிடம் மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணை
பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனிடம் அவருக்கு எதிரான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டில் மாத்திரம் பிள்ளையானுக்கு எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அவர் மீதான மேலும் பல குற்றச்சாட்டுகள் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்துவருகின்ற நிலையில் அது குறித்தும் விசாரணை …
Read More »ஈஸ்டர் தாக்குதல் துன்பத்தை அரசியல் லாபமீட்ட அரசாங்கம் பயன்படுத்துகிறது – நாமல்
உள்ளுராட்சி தேர்தலிற்கு முன்பாக அரசியல் இலாபமீட்டுவதற்காக அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பயன்படுத்துகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். அரசாங்கம் தேசிய துன்பியல் நிகழ்வை உணர்ச்சிபூர்வமான பதில்களை தூண்டவும், பொதுமக்களின் உணர்வுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் கையாள்கின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். நீதிபதி ஜனக் டி சில்வா தலைமையிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை அப்போதைய ஜனாதிபதியின் உத்தரவிற்கு ஏற்ப 2021 பெப்பிரவரி 23ம் திகதி நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது என தெரிவித்துள்ள நாமல் ராஜபக்ச நாடாளுமன்ற …
Read More »பிள்ளையானுக்காக நாமல் கவலையடையும் காரணம் காலப்போக்கில் வெளிவரும் – நளிந்த
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்ற சிவனேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கவலையடைவதற்கு காரணம் உள்ளதாகவும், அதனை எதிர்காலத்தில் அனைவரும் அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். எனவே, இந்த விடயம் தொடர்பில் விசாரணைக் குழு உரிய முறையில் விசாரணைகளை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் என்ற அடிப்படையில் அதற்கான வசதிகளை மாத்திரம் தங்களது தரப்பு வழங்குவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். விசாரணைகளை தொடர்ந்து சட்டமா அதிபரால் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் …
Read More »வீழ்ச்சியைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (21) வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதனடிப்படையில் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 16.96 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்தவகையில் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 15,599.61 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. அதன்படி கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 1.1 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது
Read More »சாமர சம்பத் தசநாயக்கவிற்கு விளக்கமறியல் நீடிப்பு
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (21) குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
Read More »பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார். அமைதி, இரக்கம், மனிதநேயம் மீதான பாப்பரசரின் அர்ப்பணிப்பு உலகில் ஒரு அசைக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் சார்பாக தமது இரங்கலைத் தெரிவிப்பதாக ஜனாதிபதி அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Read More »