Other News

கோவை சிறுவன் கொலை சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் வேதனை

கோவை இருகூர் அருகே 13 வயதுச் சிறுவன் நண்பர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மனதைப் பதைபதைக்க வைப்பதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார். பெற்றோர்கள் பிள்ளைகளின் உளவியல் மாற்றங்களைக் கண்காணித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்றும், ஆசிரியர்கள் கல்வியோடு அன்பையும் பொறுமையையும் மாணவர்களிடம் விதைக்க வேண்டும் என்றும், வருங்காலமான குழந்தைகளைப் பாதுகாப்பது சமூகக் கடமை என்றும் அவர் கூறியுள்ளார்.

முதலமைச்சரை கடுமையாக விமர்சித்த வானதி சீனிவாசன்

பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எக்ஸ் தள பதிவு ஒன்றை இட்டு முதலமைச்சர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார் அதில் அவர் தெரிவித்துள்ளதாவது “இதுதான் உங்களது “நாகரிக அரசியலா” முதல்வர் விஜய் அவர்களே! தமிழர்களின் தொன்மையான சோழர் பெருமையை 300 ஆண்டுகளுக்குப் பிறகு மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு சின்ன பாராட்டு கூட தெரிவிக்க முடியாத அளவுக்கு உங்களுக்கு தமிழ் வரலாறு மீது எவ்வளவு அலட்சியம் இருக்க […]

விசிக உயர்நிலைக்குழு அவசரக்கூட்டம் ரத்து

சென்னையில் நாளை நடைபெற இருந்த விசிக உயர்நிலைக்குழு அவசரக்கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிப்பு. ஆட்சியமைக்க தவெக தலைவர் விஜய் ஆதரவு கேட்டுள்ள நிலையில், நாளை நடைபெற இருந்த விசிக உயர்நிலைக்குழு கூட்டம் ரத்து

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைக்கு எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படவில்லை – ஈரான்

அமெரிக்காவுடன் புதிய பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பது குறித்து எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லலையென ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் அரசு ஊடகமான IRNA இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவடைந்த நிலையில், தற்போதைய நிலவரங்கள் குறித்து மட்டுமே இந்த தகவல்கள் பரிமாறப்பட்டதாக தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே இந்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகலாம் என தகவல்கள் வெளியாகியிருந்தன. எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகப்பூர்வ உறுதிப்படுத்தல்கள் வெளியாகவில்லை என்பதும் […]

பிரித்தானியாவில் ராக்கெட் வேகத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் தொடர்ந்து 43 நாட்களாக உயர்ந்திருந்த பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் தற்போது எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லையென வாகன அமைப்பான RAC தெரிவித்துள்ளது. வளைகுடா பகுதியில் ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதுடன், மொத்த சந்தைகளிலும் எரிபொருள் விலைகள் சரிவடைந்துள்ளன. ஆனால், முந்தைய நிலவரத்துடன் ஒப்பிடும்போது விலைகள் இன்னும் அதிகமாகவே உள்ளன. பெட்ரோல் லீற்றருக்கு சுமார் 158 பென்ஸ் அளவில் விற்பனையாகிறது. டீசல் விலை லீற்றருக்கு […]

ஈரான் போர் இழப்பு 270 பில்லியன் டொலர்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஈரான் அடைந்துள்ள பொருளாதார மற்றும் உட்கட்டமைப்பு பாதிப்புகள் குறித்த முதற்கட்ட மதிப்பீடுகளை ஈரான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஈரான் அரசின் ஊடகப் பேச்சாளர் பாத்திமா மொஹஜெரானி, ரஷ்யாவின் ஆர்.ஐ.ஏ நோவோஸ்டி செய்தி நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலில் பின்வரும் விபரங்களை வெளியிட்டுள்ளார். தற்போதுவரை ஏற்பட்டுள்ள சேதங்கள் சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது ஒரு ஆரம்பக்கட்ட மதிப்பீடு மட்டுமே என்றும், முழுமையான […]

புத்தாண்டில் ஜனாதிபதி செய்த ‘புதுமை’!

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த நிலையில், அரசாங்கத்தின் இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மீள நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பங்கேற்றார். அநுராதபுரம் – கல்நேவ பிரதேச செயலகப் பிரிவின் மல்பெலிகல கிராமத்தில் எச்.எம். இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிய வீட்டிலேயே இந்நிகழ்வு இடம்பெற்றது. முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளதுடன், கல்நேவ பிரதேச செயலாளர் […]

ஹார்முஸ் நீரிணை திறப்பு: ராஜதந்திர முயற்சிக்கு ஆஸ்திரேலியா ஆதரவு!

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல் போக்குவரத்துக்கான சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதில் தமது நாடு அதிக ஆர்வம் காட்டிவருகின்றது என ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்லெஸ் Richard Marles தெரிவித்தார். உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைச் சீரமைக்க குறித்த நீரிணை கட்டாயம் திறக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதற்கான சர்வதேச இராஜதந்திர முயற்சியில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற கூட்டணி நாடுகளுடன் இணைந்து செயல்பட ஆஸ்திரேலியா தயாராக உள்ளது. எனினும், […]

ஹார்முஸ் நீரிணையை முற்றுகையிட எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை

உலகளாவிய கடல் போக்குவரத்து பாதுகாப்பைப் பொறுப்பாகக் கொண்டுள்ள சர்வதேச கடல்சார் அமைப்பின் பொதுச் செயலாளர் அர்செனியோ டொமிங்கஸ், ஹார்மூஸ் நீரிணையை எந்த நாடும் சட்டப்படி முற்றுகையிட முடியாது என்று தெரிவித்துள்ளார். லண்டனில் உள்ள அந்த அமைப்பின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், “சர்வதேச சட்டத்தின்படி, சர்வதேச கப்பல் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் நீரிணைகளை மறிக்கும் உரிமை எந்த நாட்டிற்கும் இல்லை” என்று கூறினார். அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கை ஈரானிய துறைமுகங்களை […]

முற்றுகையை நெருங்கினால் ஈரானிய ‘தாக்குதல் கப்பல்கள்’ முழுமையாக அழிக்கப்படும்

அமெரிக்க கடற்படை அமைத்துள்ள முற்றுகைக்கு அருகில் ஈரானின் தாக்குதல் கப்பல்கள் நெருங்கினால் அவை முற்றிலுமாக அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ட்ரம்ப் தனது பதிவில், “ஈரானின் கடற்படை, 158 கப்பல்களுடன், கடலின் அடியில் முற்றிலுமாக அழிந்து கிடக்கிறது. அவர்கள் ‘வேகமான தாக்குதல் கப்பல்கள்’ என்று அழைக்கும் சிறிய எண்ணிக்கையிலான கப்பல்களை நாங்கள் தாக்கவில்லை, ஏனெனில் அவற்றை நாங்கள் ஒரு பெரிய அச்சுறுத்தலாகக் கருதவில்லை,” என்று […]