சஜித்துடன் இணைய முயற்சிக்கும் அரசியல் தலைமைகள்

Spread the love

சஜித்துடன் இணைய முயற்சிக்கும் தலைமைகள்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கமைய, டலஸ் அழகப்பெரும , தயாசிறி ஜயசேகர மற்றும் ரொஷன் ரணசிங்க தலைமையிலான அரசியல் குழுக்களே குறித்த முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு பின்னர், அதிலிருந்து விலகி எதிர்க்கட்சிகளுடன் இணைந்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.