சர்வதேச ஊடகங்களில் முக்கிய பேசுப்பொருளாகிய ரணில் கைது

சர்வதேச ஊடகங்களில் முக்கிய பேசுப்பொருளாகிய ரணில் கைது
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டமை சர்வதேச ஊடகங்களில் முக்கிய செய்தியாக பிரசுரமாகியுள்ளது.

இந்திய, அவுஸ்திரேலிய, ஆபிரிக்க, ஐரோப்பிய அமெரிக்க மத்திய கிழக்கு ஊடகங்களில் இந்த செய்தி முக்கிய செய்தியாக பிரசுரமாகியுள்ளது.

அரச நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுக்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தலைப்பில் இந்த செய்திகள் வெளியாகியுள்ளன.

அதேநேரம் உலக தலைவர்களை பொறுத்தவரை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நசீட், தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதுவும் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படுவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட கருத்தாகும்.

அதில், ரணில் விடுதலை செய்யப்படுவார் என்ற நம்பிக்கை தமக்கிருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பாகிஸ்தானில் தாக்குதல் – 15 தீவிரவாதிகள் பலி