Saturday , August 18 2018
Breaking News
Home / Tag Archives: திமுக

Tag Archives: திமுக

அழகிரியின் பிளானால் ஆட்டம் காணும் திமுக

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் அழகிரியும் அமைதியாக இருந்ததால் மு.க.ஸ்டாலின் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க பிரச்சனை இருக்காது என்றே அனைவரும் கருதினர். ஆனால் மு.க.அழகிரி திடீரென தனது ஆதங்கத்தை திமுகவில் அழகிரியை மீண்டும் சேர்த்தால் அது கருணாநிதி எடுத்த முடிவுக்கு எதிராக இருக்கும் என்பதால் திமுக மூத்த தலைவர்கள் அழகிரியை மீண்டும் கட்சியில் சேர்க்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அழகிரியை பகைத்து கொண்டு …

Read More »

திமுகவில் அழகிரிக்கு இடமில்லை : மு.க.ஸ்டாலின் உறுதி

திமுகவில் அழகிரியை சேர்க்கப்போவதில்லை என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. திமுகவில் அழகிரி மீண்டும் சேர்த்துக்கொள்ளப்படுவாரா என்பதுதான் தற்போது பெரும்பாலோரின் கேள்வியாக இருக்கிறது. ஊடகங்கள் மற்றும் செய்திதாட்களில் இது தொடர்பான செய்திகளே அதிகம் விவாதிக்கப்படுகிறது. திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி அதன்பின் நிரந்தரமாகவும் நீக்கப்பட்டுவிட்டார். கடந்த 5 வருடங்களாக அவர் திமுகவில் இல்லை. இந்நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதியின் மறைவு திமுகவில் மாற்றங்கள் ஏற்பட வழிவகை செய்துள்ளது. …

Read More »

அழகிரியின் ஆட்டம் ஆரம்பம்; வீடியோ பதிவால் அதிர்ச்சி

அழகிரியின்

திமுக தலைவர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரியின் பெயரில் இயங்கி வரும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள “அழகிரியின் ஆட்டம் ஆரம்பம்” என்ற வீடியோ பதிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவேரி மருத்துவமனையில் வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல் நலிவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, சிகிச்சை பலனின்றி கடந்த 7-ம் தேதி காலமானார். இதையடுத்து, கட்சியை வழிநடத்துவது யார்? …

Read More »

திமுகவில் அழகிரி கேட்கும் பதவி என்ன தெரியுமா?

அழகிரி

கருணாநிதி மறைவிற்கு பின்னர் திமுக தலைவர் பதவியை விரைவில் ஏற்கவுள்ள மு.க.ஸ்டாலின், அந்த பதவிக்கு போட்டியும் எதிர்ப்பும் வராமல் இருக்க மு.க.அழகிரியை மீண்டும் கட்சிக்குள் இணைத்து அவருக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதேபோல் கனிமொழிக்கு திமுக பொருளாளர் பதவி கொடுக்க முடிவு செய்திருப்பதாகவும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் தனக்கு தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவிக்கு பதிலாக மாநில அளவிலான ஒரு பதவி …

Read More »

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றியே தீருவேன்: டிராஃபிக் ராமசாமி பரபரப்பு பேட்டி!

மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை அகற்றாமல் விட மாட்டேன் என்று சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தெரிவித்துள்ளார். கடற்கரையில் தலைவர்களுக்கு நினைவிடங்கள் அமைக்கக்கூடாது என்ற வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் கருணாநிதியின் மறைவையொட்டி அவருக்கு மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்ய அந்த 5 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டன. இந்த வழக்குகளில் டிராஃபிக் ராமசாமியின் வழக்கும் ஒன்றாகும். மற்ற வழக்குகளோடு டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கும் வாபஸ் வாங்கப்படும் என அவரது வழக்கறிஞர் …

Read More »

திமுக தலைவர் ஆகிறார் ஸ்டாலின்: கனிமொழி, அழகிரிக்கு புதிய பதவி?

திமுக தலைவராக இருந்த மு.கருணாநிதி காலமானதை அடுத்து அக்கட்சியின் செயல் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் விரைவில் திமுக தலைவராக பதவியேற்க உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் கனிமொழி மற்றும் அழகிரியை சமாளிக்க இருவருக்கும் திமுகவில் முக்கிய பதவிகள் வழங்கவும் ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவில் இருந்து விலக்கப்பட்ட அழகிரி, மீண்டும் கட்சியில் சேர்த்து கொள்ளப்படுவார் என்றும், அவருக்கு கட்சியில் முக்கிய …

Read More »

கிழக்கில் மறைந்தது சூரியன்!!! மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார் திமுக தலைவர் கருணாநிதி

கிழக்கில்

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞர் கருணாநிதியின் உடல் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. திமுக தலைவர் கருணாநிதி உடல் நலிவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் ஜூலை 27-ம் தேதிஅனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. திமுக தலைவரின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் மூழ்கடித்துள்ளது. இதனையடுத்து …

Read More »

கலைஞரின் இறுதி ஊர்வலம் தொடங்கியது

கலைஞரின்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி ஹாலில் இருந்து அண்ணா நினைவிடம் நோக்கி தொடங்கியது. காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதயின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அவருக்கு பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, அண்டை மாநில முதல்வர்கள் என பல அரசியல் கட்சி தலைவர்களும், கோடிக்கணக்கான தொண்டர்களும், அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து குடும்பத்தினர் இறுதி …

Read More »

கலைஞருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி

கலைஞருக்கு இறுதி அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி இறுதி அஞ்சலி செலுத்தினார். காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், கருணாநிதியின் உடலுக்கு இறுதி அஞ்சலி …

Read More »

கலைஞர் கருணாநிதி மரணம்: முதல்வர், துணை முதல்வர் இறுதி அஞ்சலி செலுத்தினர்

கலைஞர் கருணாநிதி மரணம்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் உடலுக்கு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இறுதி அஞ்சலில் செலுத்தினர். காவேரி மருத்துவமனையில் உயிரிழந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நாடு முழுவதும் இருந்து இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் பன்வாரிலால் …

Read More »