Monday , October 22 2018
Home / Tag Archives: மட்டக்களப்பு

Tag Archives: மட்டக்களப்பு

மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

மாணவர்

மட்டக்களப்பு, தாழங்குடா தேசிய கல்வியல் கல்லூரி மாணவர் ஒருவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு பொக்கணை பிரதேசத்தினை சேர்ந்த 23 அகவையுடைய மனுவேல்பிள்ளை பிரதீபன் என்ற கல்வியற் கல்லூரி மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் உடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு ஆரையம் பதியில் உள்ள கல்வியற் கல்லூரியில் முதலாம் வருட மாணவனாக கல்வி கற்றுக்கொண்டிருந்த மாணவன் கல்லூரியில் இணையும் பொது …

Read More »

எருவில் பகுதியில் தாய் செய்த மோசமான செயல்

எருவில்

ஒரு குழந்தையினை உருவாக்குவதற்கு பெற்றோர் பல்வேறு அர்ப்பணிப்புகளை செய்கின்றனர்.அதன்மூலம் சிறந்த பண்பான சமூகத்தினை உருவாக்கின்றனர். ஆனால் சிலர் தமது குழந்தைகளிடமே தமது வக்கிரபுத்திகளை காட்டி எதிர்காலத்தில் அவர்களை இந்த நாட்டில் ஒரு குற்றவாளியாகவோ சமூகத்திற்கு எதிரானவர்களாகவோ உருவாக்கும் பெற்றோரும் இந்த சமூகத்தில் இருக்கவே செய்கின்றனர். தான்பெற்று வளர்த்த பிள்ளையினையே தாய் ஒருவர் சூடுவைத்து வந்த சம்பவம் ஒன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எருவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 11வயதுடைய …

Read More »

புல்லுமலையில் யானை தாக்குதலில் பலியானவர் சடலம் பெற உறவினர் பரிதவிப்பு!

புல்லுமலையில்

நேற்றைய தினம்(24/08) யானையின் தாக்குதலில் கொல்லப்பட்ட சடலத்தை பரிசோதனை செய்ய மரணவிசாரணையதிகாரி விடுமுறையால் சடலம் பெற பொதுமக்கள் பரிதவிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் யானை தாக்குதலில் தொடர்ந்து ஒவ்வொரு தமிழ் கிராம ஏழைகள் பரிதாபமாக பலியாகும் சம்பவங்களும் அதனால் அவர்கள் குடும்பத்தின் எதிர்காலங்கள் கேள்விக்குறியாக உள்ள துன்பியல் சம்பவங்கள் இடம்பெறுகின்றது. நேற்றைய தினம் செங்கலடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட உறுகாமம் கிராமமிருந்து மாலை 5மணியளவில் மண்ஏற்ற சென்ற மூன்று பேரை கொடூர காட்டு …

Read More »

மட்டக்களப்பு குடும்பி மலையும் பறிபோகின்றது?

மஹிந்த அரசு சம்பூரை இந்தியாவிற்கு தாரை வார்த்திருந்த கதை கடந்து தமிழபேசும் மக்களின் தாயகமான கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குடும்பிமலையில் 68 ஆயிரத்தி 250 ஹெக்டேயர் காணியை சீன அரசின் நிறுவனம் ஒன்றுக்கு கையளிப்பதற்கு மைத்திரி- ரணில் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கரும்புச் செய்கைக்காக இந்தக் காணியை வழங்கவுள்ளதாக இலங்கைப் பிரதமர் அலுவலகத் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று தெற்கு (கிரான்) ஏறாவூர்பற்று (செங்கலடி) ஆகிய பிரதேச …

Read More »

மட்டக்களப்பில் முச்சக்கரவண்டி , கொள்கலன் பாரவூர்தி மோதி கோர விபத்து

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை, பிள்ளையாரடி எனுமிடத்தில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் படுகாயமடைந்துள்ளனர். கொள்கலன் பாரவூர்தியொன்றும் முச்சக்கரவண்டியும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு காவற்துறை தெரிவித்துள்ளது. சம்பவம் இடம்பெற்றவுடன் நெடுஞ்சாலையில் பயணித்தவர்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியோர் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பில் மட்டக்களப்பு போக்குவரத்துப் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Read More »

தூக்கிட்டுக் கொண்ட 17 வயது யுவதி : ஊரையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்!!

எனது மகளுக்கு நாங்கள் எவ்வித கட்டுபாடுகளையும் விதிக்கவில்லை…. இருந்தும் அவர் ஏன் இப்படி செய்தார்….. நான் அவள் இல்லாமல் எப்படி வாழப்போகின்றேன்…. மட்டக்களப்பு வெல்லாவெளி விவேகானந்தபுரம் பகுதியில் யுவதி ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டுக் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். 17 வயதுடைய அரியநாயகம் நிருலக்ஷனி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று மாலை ஐந்து மணியளவில் …

Read More »

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்- வீடு சேரும் முன்னரே நடந்த சோகம்!!

வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்காக நாடு திரும்பியிருந்த இளைஞர் ஒருவர் வீடுபோய்ச் சேர முன்னர் பேருந்து விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் தம்புள்ளைப் பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சவுதியில் பணியாற்றும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று மாலை விடுமுறையில் நாடு திரும்பியுள்ளார். இதனையடுத்து ஊருக்குச் செல்வதற்காக கொழும்புலிருந்து மட்டக்களப்பு வீதி ஊடாக அக்கரைப்பற்று செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றில் ஏறியுள்ளார். இந்த நிலையில் தம்புள்ளை அருகே உள்ள …

Read More »

உதவி கோரிய முன்னாள் போராளி; விரைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

இடுப்புக்கு கீழ் இயங்கமுடியாத நிலையில் உள்ள முன்னாள் போராளியின் வீட்டுக்கு நேற்று (15.06.2018) மாலை விஜயம் செய்த மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவரின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக மிகவும் வறிய நிலையிலும் தமிழ் இளைஞர்கள் ஆயுதங்களை தூக்கி போராடியவரலாறு வடகிழக்கில் உள்ளது. தமது குடும்பத்தின் நிலமையினையும் கருத்தில் கொள்ளாமல் களத்தில் நின்று போராடியபோதும் அவர்களின் குடும்பத்தின் …

Read More »

படுத்த படுக்கையாக கிடக்கும் முன்னாள் போராளி!

மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம் 48 வயது என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார். இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல் என்பவரும் நடக்க முடியாது உள்ளார். இவரை வைத்திய சாலைக்கு கொண்டு பராமரிக்க ஒருவரும் இல்லாத நிலையில் இவர் தொடர்ந்தும் படுத்த படுக்கையாக உள்ளார். இவருக்கு சக்கர நாற்காலி …

Read More »

தமிழர்கள் நிலப்பரப்பில் மர்மமான தீவு; உள்ளே மர்ம நபர்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிவிசால நிலப்பரப்பை கொண்ட எழில் மிகு வாவி சூழ்ந்த மாந்திவில் உள்ளடங்கியிருக்கும் மறுமம்தான் என்னவோ என மக்களால் கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது. மட்டக்களப்பு போதன வைத்தியசாலையின் ஒரு பிரிவாகிய தொழு நோயாளர்களுக்கான சிகிச்சை அளிக்கப்படும் வைத்தியசாலையே இந்த மாந்திவிலில் மறைந்திருக்கும் அதிசயமாக திகழ்ந்து கொண்டிருக்கின்றது. தொழு நோய் என்பது ஒரு தொற்று நோயாகவும் அதை கட்டுப்படுத்த முடியாத நோயாகவும் கடந்த காலங்களில் இருந்து வந்தமையினால் மக்கள் குடியேற்றம் …

Read More »