Wednesday , November 14 2018
Home / Tag Archives: ரணில்

Tag Archives: ரணில்

சஜித்தை தலைவராக நியமிக்குமாறு ரணிலுக்கு வேண்டுகோள்

நாட்டின் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் , ஐக்கிய தேசியக் கட்சியின் எழுச்சிக்காகவும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் பதவியை சஜித் பிரேமதாசவிற்கு வழங்குமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஐக்கிய தேசிய கட்சியை பாதுகாப்பதற்கான அமைப்பின் பிரதான செயலாளர் எஸ்.ஆர். எம். விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் தற்போது நிலவியுள்ள அரசியல் குழப்பநிலையை கருத்தில் கொண்டு நாட்டின் எதிர்கால நலனிற்காகவும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகவும் , ஜக்கிய தேசிய கட்சியின் பாதுகாப்பதற்காகவும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் …

Read More »

ரணிலுக்கு ஆதரவு மணி அடிக்கின்றது ஜே.வி.பி.!

“அரசமைப்பின் பிரகாரமே பிரதமர் பதவியில் மாற்றம் இடம்பெறவேண்டும். தற்போது நடந்துள்ளது அரசியல் சூழ்ச்சியாகும்” என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “நாடாளுமன்றம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும். பிரதமர் பதவியில் மாற்றம் என்பது அரசமைப்பின் பிரகாரம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இடம்பெற வேண்டும். ஜே.வி.பி. எம்.பிக்கள் ஆறு பேரினதும் நிலைப்பாடு இதுவாகவே இருக்கின்றது. …

Read More »

நாடாளுமன்றத்தைக் கூட்டவே கூடாது! கோட்டா சண்டித்தனம்

இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையீடு செய்ய பல நாடுகள் முயற்சிக்கின்றன என்றும், வெளிநாடுகளின் கோரிக்கைக்கு அமைய நாடாளுமன்றத்தைக் கூட்டக் கூடாது என்றும் கூறியுள்ளார் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ. அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:- “மைத்திரி – மஹிந்த அரசில் நான் எந்தப் பதவியையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. தற்போதைய அமைச்சர்கள், மக்களுக்கு அவசியமான நிவாரணங்களை வழங்கி அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டிய தேவை உள்ளது. அதன் பின்னர், நாடாளுமன்றத் தேர்தலுக்கு …

Read More »

இலங்கை வருகிறதா ஐ.நா பாதுகாப்பு படை?

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய பிரதமராக ராஜபக்சே பதவியேற்றதால் அங்கு அரசியல் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் இன்னும் பிரதமர் என்று கூறி வரும் ரணில், இலங்கையின் பாதுகாப்புக்கு ஐ.நா. படை வரவேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக கூறப்பட்டது. இலங்கையில் கடந்த 2011ஆம் ஆண்டு விடுதலைபுலிகள் உடனான இறுதிப்போர் நடைபெற்றபோதே ஐ.நா பாதுகாப்பு படை அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …

Read More »

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்!

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஐ.தே.க., கூட்டமைப்பு, ஜே.வி.பி. இணைந்து இடைக்கால அரசு!! – பேச்சுகள் தீவிரம் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க ஐ.தே.கவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் உத்தேசித்து வருகின்றனர் எனத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசு அமைக்கப்பட்டதன் இலக்குகளை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது எனவும் …

Read More »

நாட்டு மக்களுக்கு ரணில் விக்கிரமசிங்க விசேட உரை!

நாட்டின் அரசமைப்புக்கு அமைவாக தானே இன்னமும் பிரதமர் பதவியில் நீடிப்பதாக அறிவித்திருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார். அலரிமாளிகையிலிருந்து மாலை 5.30 மணிக்கு இந்த விசேட உரையை அவர் ஆற்றுவார்.

Read More »

அலரிமாளிகையில் ரவி! – ரணிலுடன் முக்கிய பேச்சு

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இன்று நண்பகல் அலரி மாளிகைக்குச் சென்றுள்ளார். தனது ஆதரவாளர்களுடன் அலரி மாளிகைக்குச் சென்ற ரவி கருணாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து முக்கிய பேச்சு நடத்தியுள்ளார். இ​தேவேளை, ரவி கருணாநாயக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளார் என்று கடந்த சில தினங்களாக வெளிவரும் செய்திகளுக்கு மத்தியில், ரவி இன்று ரணிலைச் சந்தித்துள்ளமை …

Read More »

சபாநாயகரின் எதிர்ப்பை மீறி ராஜபக்சே பதவியேற்பு

இலங்கையில் அதிபர் சிறிசேனா திடீரென பிரதமர் ரணில்விக்ரமிசிங்காவை பதவிநீக்கம் செய்துவிட்ட் அவருக்கு பதிலாக ராஜபக்சேவை பிரதமராக நியமனம் செய்தார். சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையின் ஒருசில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன இந்த நிலையில் ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமராக தொடர்வாதாக அறிவித்தார். மேலும் நாடாளுமன்றத்தை கூட்டினால் மெஜாரிட்டியை நிரூபிக்க தயார் என்றும் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் ராஜகபக்சே, சிறிசேனா கூட்டணிக்கு 95 உறுப்பினர்களும், ரணில் விக்ரமசிங்கேயின் ஐக்கிய தேசிய மக்கள் …

Read More »

சில தினங்களில் கோட்டாவின் அராஜகம் தலைவிரித்தாடும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகள் தொடர்பில் அவசரப்பட்டு முடிவெடுக்க முடியாதென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “முன்னாள் ஐனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இராணுவ ஆட்சிக் கொடுமைகள் என்பன எமக்கு எதிராக இழைக்கப்பட்டிருந்தன. அதேநேரம் …

Read More »

பதிலடி கொடுக்கத் தயாராகின்றது குற்றவியல் பிரேரணை

ரணில் விக்கிரமசிங்கவை அரசமைப்புக்கு முரணான வகையில் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி களமிறங்கியுள்ளது. இதற்கான பொறுப்பு அரசமைப்பு நிபுணர் ஜயம்பதி விக்கிரமரட்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்தக் குற்றவியல் பிரேரணைக்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி எம் பிக்களிடம் இன்று கையொப்பங்கள் பெறப்படுகின்றன. எனினும், நாடாளுமன்ற அமர்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம் 16ஆம் திகதி …

Read More »
Social Media Auto Publish Powered By : XYZScripts.com