இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தனர். கடந்த மாதம் 4ம் தேதி 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை சிறைப்பிடித்தது. மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 3 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று சால்வை அணிவித்து வரவேற்ற பாஜகவினரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். சால்வையை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அரசு செலவில் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் அழைத்து சென்றனர். …
Read More »