48 மணி நேரத்துக்குள் நாட்டைவிட்டு வெளியேறுமாறு இந்தியா உத்தரவு காஷ்மீரில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்தியாவினால் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களாவன, பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர்களின் பதவிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு உயர்ஸ்தானிகராலயங்களின் அலுவலர்களின் எண்ணிக்கையும் 55 இல் இருந்து 30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது பாதுகாப்புப் படைகளை “உயர் விழிப்பு நிலையில்” வைத்துள்ளது. …
Read More »விமான சேவையை நிறுத்துவதாக ஏர்-பிரான்ஸ் அறிவிப்பு
சென்னை – பாரிஸ் நேரடி விமான சேவையை மார்ச் மாதத்துடன் நிறுத்தப்போவதாக ஏர் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா பேரிடருக்கு பின், கடந்த 2021-ஆம் ஆண்டு சென்னைக்கு நேரடி விமான சேவையை ஏர் பிரான்ஸ் தொடங்கியது. தங்களது விமான சேவைகளை மேம்படுத்துவதற்காக, இந்த மார்ச்சுடன் சென்னைக்கான நேரடி விமான சேவையை நிறுத்தப்போவதாகவும், ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. பாஜக ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது! ஆர்.எஸ்.பாரதி
Read More »இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்
இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தனர். கடந்த மாதம் 4ம் தேதி 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை சிறைப்பிடித்தது. மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 3 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று சால்வை அணிவித்து வரவேற்ற பாஜகவினரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். சால்வையை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அரசு செலவில் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் அழைத்து சென்றனர். …
Read More »