பாகிஸ்தானில் தாக்குதல் – 15 தீவிரவாதிகள் பலி பாகிஸ்தானில் பாதுகாப்புப்படையினர் நடத்திய தாக்குதலில் 15 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் பைபர் பக்துவா மாகாணம் தெற்கு வாசிர்தான் மாவட்டம் ஆசன் வார்சக் பகுதியில் தீவிரவாதிகள் செயற்படுவதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, நேற்றிரவு பாகிஸ்தான் பாதுகாப்புப்படையினர் அந்தப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர். இதன்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர். இதற்கு பதிலடியாக பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது பாதுகாப்புப்படையினரில் …
Read More »