பைடன், ட்ரம்ப் நேரடி விவாதம்.. அனல் பறந்த குற்றச்சாட்டுகள் அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முக்கிய வேட்பாளர்களான அதிபர் ஜோ பைடன், ட்ரம்ப் இடையே முதலாவது நேரடி விவாதம் நடந்தது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அட்லான்டாவின் சிஎன்என் ஊடக ஸ்டூடியோவில் ஜோ பைடன், ட்ரம்ப் இடையேயான நடந்த முதலாவது நேரடி விவாதம் இது. வெளியுறவு, பொருளாதாரம், குடியுரிமை, காலநிலை மாற்றம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதம் செய்தனர். இருவரும் அவரவர் ஆட்சியில் செய்த சாதனைகளை பட்டியலிட்ட …
Read More »நாட்டில் குழப்பமும், இருளும் சூழும் – ஜோ பைடன்
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாட்டில் குழப்பமும் இருளும் சூழ்வதுடன், மக்களிடையே பிளவு ஏற்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். தனது ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், வேலைவாய்ப்பு, பணவீக்கம், மருந்துகள் விலை, துப்பாக்கிக் கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் நாடு மேம்பாடு அடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஒருவேளை டிரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களுக்குத் தடை ஏற்படும், டிரம்புக்கு மனக்குறையும் மனக்கசப்பும் உள்ளதால், பதவியேற்ற பிறகு பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் பைடன் தெரிவித்துள்ளார். …
Read More »