Friday , January 18 2019
Home / Tag Archives: Police

Tag Archives: Police

சென்னை முழுவதும் குவிக்கப்பட்டுள்ள போலீஸ்

சோனியா காந்தி

கருணாநிதி சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வருகையையொட்டி சென்னையில் பல இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் திருஉருவ சிலை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவிற்கு சோனியா காந்தி, சந்திரபாபு நாயுடு, நாராயணசாமி, பினராயி விஜயன் உட்பட இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு முக்கியத் தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.  சிலை …

Read More »

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் அதிரடி நடவடிக்கை

“யாழ்ப்பாணத்தில் சகல குற்றச்செயல்களையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். தற்போது முன்னெடுக்கப்படும் வீதிச் சுற்றுக்காவல் நடவடிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கப்படும்” என யாழ்ப்பாண மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டத்தில் மூத்த பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். யாழ் மாவட்டச் செயலாளரும் சிவில் பாதுகாப்புக்கழு தலைவருமான நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்தக் கூட்டம் மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் இடம்பெற்றது. யாழ்ப்பாண குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் …

Read More »

தருமபுரி மாணவி பாலியல் வன்கொடுமை

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவரான சதீஷ் கைது செய்யப்பட்டுள்ளான். தருமபுரி மாவட்டம் அரூர் கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி, கடந்த 5-ஆம் தேதியன்று இரண்டு காமுகர்களால் பாலியல் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார். அன்று முதல் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அச்சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதற்கிடையே, குற்றவாளிகளைக் கைது செய்யக்கோரி ஊர்ப்பொதுமக்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு …

Read More »

ஏ.ஆர்.முருகதாஸ் கைதா? வீட்டின் முன் போலீஸ்

நேற்று நள்ளிரவில் சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் வீட்டின் முன் போலீஸார் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தின் பிரச்சனை நேற்று உச்சத்திற்கு சென்ற நிலையில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழுவினர் ஒப்புக்கொண்டனர். இன்று மதியம் மறு தணிக்கை செய்யப்பட்டு புதிய பொலிவுடன் சர்கார் திரைப்படம் திரையரங்கில் திரையிடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் மீது தேவராஜன் என்பவர் அளித்த புகாரின் …

Read More »

நாய்க்கழிவுகளைக் கூட அள்ள வைத்தனர்

டெல்லி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதியாக கிருஷ்ண காந்த் சர்மா என்பவர் பணிபுரிகிறார். இவரின் மனைவி ரிது கார்க் (வயது 38), மகன் துருவ் (வயது 18). இருவரையும் ஷாப்பிங் அழைத்துச் சென்ற பாதுகாப்பு போலீஸ்காரர் மகிபால்சிங் இருவர் மீதும் துப்பாக்கிச்சூடு நடத்தினார். படுகாயமடைந்த ரிது கார்க் மருத்துவமனையில் உயிரிழந்தார். துருவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி மனைவியைச் சுட்ட பிறகு, அவரை போனில் அழைத்த போலீஸ்காரர் மகிபால்சிங்,’ உன் …

Read More »

நான் அடிப்பேன்னு முதல்வரே பயப்படுகிறார்

நான் அடிப்பேன்னு

அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் திருப்புவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் கருணாஸ் அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், அதிமுக, திமுக, தினகரன் கட்சி என மாறி மாறி ஆதரவு கொடுத்து வரும் கருணாஸ், காலத்திற்கு தகுந்தால் போல் ஒருசிலரை போற்றியும் சிலரை தூற்றியும் பேசி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்ட கருணாஸ் …

Read More »

காவல்துறை ஒரு ஊழல்துறை – எகிறிய எச்.ராஜா

காவல்துறை

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா காவல் துறையையும், நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்துள்ளார். பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிட்டத்தட்ட தினந்தோறும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டி கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் படி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்த போதிலும் பல இடங்களில் கலவரம் …

Read More »

கலைந்து செல்ல மறுத்த திமுக தொண்டர்கள் மீது லேசான தடியடி

கலைந்து செல்ல

திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சற்றுமுன் அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தற்காலிக பின்னடைவு ஏற்பட்டிருந்தாலும் அவருக்கு அளிக்கப்பட்டு கொண்டிருக்கும் சிகிச்சையால் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவேரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்களின் கூட்டம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்து கொண்டே வருவதால் அவர்கள் அனைவரும் கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். முன்னாள் திமுக …

Read More »

600 சிறுவர்கள் நரபலியா? மத போதகரின் கொடூர செயல்

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா நாட்டில் மத போதகர் ஒருவர் சுமார் 600 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த நடந்த விசாரணையில் அந்நாட்டில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் மூலம் சிறுவர்களை பெற்று வந்த மதபோதகர் ஒருவர் கடந்த 17 ஆண்டுகளில் 600 சிறுவர்களை நரபலி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது தான் சாத்தானுடன் வாழ்ந்து வருவதாகவும், சாத்தானின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் …

Read More »

வேலை தேடிய இளைஞரை விபசாரத்துக்கு அழைத்த விபரீதம்

சென்னையில் வேலை வாங்கித் தருவதாக இணையதளத்தில் விளம்பரம் செய்து ஆண்களை விபசாரத்துக்கு அழைக்கும் கும்பல் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. இளைஞர்களை குறிவைத்து பணத்தை பறிக்கும் அந்த கும்பலை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 81 லட்சம் இளைஞர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களில் உள்ள வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதாகச் சொல்லி தினமும் நூற்றுக்கணக்கான வேலைவாய்ப்பு நிறுவனங்கள் …

Read More »