Tag Archives: Sri Lanka

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இலங்கைக்கு விருது

உலக சுகாதார ஸ்தாபனத்தினால்  (WHO) வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலக புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது. விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று (07) நடைபெற்ற உலக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்விலேயே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.

Read More »

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையால் சிறைப்பிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 20 மீனவர்கள் சென்னை வந்தனர். கடந்த மாதம் 4ம் தேதி 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை சிறைப்பிடித்தது. மத்திய மாநில அரசுகளின் பேச்சுவார்த்தையை அடுத்து 20 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட மேலும் 3 மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று சால்வை அணிவித்து வரவேற்ற பாஜகவினரிடம் மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். சால்வையை வாங்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களை அரசு செலவில் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்கு வாகனங்களில் அழைத்து சென்றனர். …

Read More »