ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலை

ஆசிரியையின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்த மாணவர் பிணையில் விடுதலை

குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை ஒருவரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவரை 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையில் விடுதலை செய்ய குளியாப்பிட்டிய நீதிமன்றம் நேற்று (11) உத்தரவிட்டுள்ளது.

வெலிபென்னகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய மாணவரொருவரே இவ்வாறு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் புகைப்படத்தை மீண்டும் ஆபாசமாக சித்தரித்தால் பிணை இரத்து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்படும் என நீதிமன்றினால் குறித்த மாணவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.