Wednesday , 2 July 2025

அஞ்சல் மூல வாக்களிப்பு – இரண்டாவது நாள் இன்று!

பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் இரண்டாவது நாள் இன்றாகும்.

கடந்த 30ஆம் திகதி, முதல் நாளாக அஞ்சல் மூல வாக்களிப்பு மாவட்ட செயலக அலுவலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள் மற்றும் காவல்துறை நிலையங்களில் இடம்பெற்றது.

இதற்கமைய முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக இன்று (01) சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அஞ்சல் மூல வாக்களிப்பினை மேற்கொள்ள முடியாத வாக்காளர்கள் எதிர்வரும் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் அஞ்சல் மூல வாக்களிப்புக்காக விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …