Sunday , 6 July 2025

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதன்படி, தேசிய மக்கள் சக்தி 23 மாநகர சபைகளிலும், 26 நகர சபைகளிலும், 217 பிரதேச சபைகளிலும் முன்னிலை வகிக்கிறது.

இலங்கைத் தமிழரசுக் கட்சி 37 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதன்படி, இலங்கைத் தமிழரசுக் கட்சி 03 மாநகர சபைகளிலும், 01 நகர சபையிலும் , 33 பிரதேச சபைகளிலும் முன்னிலை வகிக்கிறது.

ஐக்கிய மக்கள் சக்தி 13 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி 02 நகர சபைகளிலும், 11 பிரதேச சபைகளிலும் முன்னிலை வகிக்கிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 05 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதன்படி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 03 பிரதேச சபைகளிலும் 02 நகர சபைகளிலும் முன்னிலை வகிக்கிறது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 03 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 03 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …