அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகினார் நிக்கி ஹேலி

0
7

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலே அறிவித்துள்ளார்.

இதனால் அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கும் ஜோபைடனுக்கும் நேரடிப் போட்டி உறுதியாகியுள்ளது. தெற்கு கரோலினாவில் டிரம்ப் வெற்றி பெற்றதையடுத்து, தமது பிரச்சாரத்தை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாகத் தெரிவித்த நிக்கி ஹேலி, அமெரிக்க மக்களிடம் தனது குரல் எட்ட வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறியிருப்பதாகக் கூறினார்.

குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான போட்டியில் இருந்து விலகுவதில் வருத்தம் ஏதுமில்லை என்றும் நிக்கி ஹேலி கூறியுள்ளார்.