அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்க தவறிவிட்டது – சஜித் !
தேர்தல் காலத்தில் விவசாயிகளுக்கான சலுகைகள் தொடர்பில் அதிகம் பேசிய தேசிய மக்கள் சக்தி தற்போது நெல்லுக்கான உத்தவாத விலையைக் கூட நிர்ணயிக்க தவறியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
குருநாகல் – ஹிரியால பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நெல் அறுவடை பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
எனினும் அரசாங்கத்தினால் நெல்லுக்கான உத்தரவாத விலையை வழங்க முடியாது போயுள்ளது.
பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு – விஜய்
நெல் கொள்முதல் செய்ய பணம் ஒதுக்கப்பட்டாலும், ஒதுக்கப்பட்ட பணத்தில் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.
கடந்த காலங்களில் தற்போதைய அமைச்சர்கள் சிலர் உர மானியம் மற்றும் நெல்லுக்கான உத்தரவாத விலை தொடர்பில் அதிகம் பேசி வந்தனர்.
தேர்தல் காலத்தில் 150 ரூபாய் உத்தரவாத விலை நிர்ணயிக்கப்படும் எனவும் அரசாங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு பெரும் போகத்தில் 2.5 மெட்ரிக் டன் மற்றும் சிறு போகத்தில் 1.7 மெட்ரிக் டன் என்றவாறு அரசாங்கம் நெல் அறுவடையை மதிப்பிட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பயிர் சேத நிவாரணம், காட்டு யானை – மனித மோதலால் ஏற்படும் பயிர் சேதம், கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கான நிவாரணங்களை வழங்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற எழுத்து மூலம் அறிவிக்கப்படாது