இனவாதத்தை நோக்கி திசை திருப்பும் தலைமைகள்

0
10

தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் சிங்கள இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள போதிலும் சிங்களத் தலைமைகள் அவர்களை இனவாதத்தை நோக்கி திசை திருப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தமிழர்களுக்கு இலங்கையினுள் தீர்வு கிடைக்காது என்பதாலேயே தொடர்ந்தும் சர்வதேசம் தலையிட வேண்டுமென கோரிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையாகியுள்ள ஏனைய 3 இலங்கையர்களுக்கேனும் நாடு திரும்புவதற்கு இலங்கையும் இந்தியாவும் வழிவகைகளை செய்ய வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சர்வதேச தலையீடு இன்றி இலங்கையினுள் தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான தீர்வு பெற்றுக் கொடுப்பதற்காகவே இந்த உண்மையை கண்டறியும் பொறிமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நாட்டு மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் நாட்டில் நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமை என்பது அவசியமாகும்.

எனவே, நம்பிக்கையான ஒரு பொறிமுறையாக, இந்த உண்மையை கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதன் மூலம் சர்வதேச தலையீடுகள் இன்றி இலங்கையினுள் நியாயமானதொரு தீர்வு பெற்றுக்கொடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டில் குழப்பமும், இருளும் சூழும் – ஜோ பைடன்