இஸ்ரேலிய பிரதமரின் இல்லத்தின் மீது தாக்குதல்!

Spread the love

லெபனானிலிருந்து இன்று காலை இஸ்ரேல் நோக்கி ஏவப்பட்ட ஆளில்லா விமானத்தினால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு சொந்தமான இல்லம் தாக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலிய வடக்கு கரையோர நகரமான செசேரியாவில் அமைந்துள்ள அவரது தனிப்பட்ட இல்லத்தின் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், இந்த தாக்குதலின்போது, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ, அவரது குடும்பத்தினரோ அங்கு இருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.