கத்தாரில் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான வயது 3 ஆக குறைப்பு!

0
11

3 வயதில் மழலையர் பள்ளி வகுப்புகளில் பாடசாலைக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான யோசனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2024.05.22ம் திகதியன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மழலையர் பள்ளி வகுப்புகளில் (kindergarten) இதுவரை காலமும் மாணவர்கள் 4 வயதில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். என்றாலும் இந்த வயதெல்லையை 4யிலிருந்து 3 ஆக குறைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கத்தாரின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி தலைமையிலான அமைச்சரவையின் வழக்கமான கூட்டத்திற்கு அமிரி திவானில் 2024.05.22 அன்று நடைபெற்றது. அந்த அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.