காசா மீது இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல்

0
11

காசாவை குறிவைத்து இஸ்ரேல் சரமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகினர். மேலும் 177 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

இதன்மூலம் இந்த போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410 ஆக உயர்ந்தது.

மேலும் இதுவரை சுமார் 71 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்ததாக பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.