ஜே.பி.வி தற்போதும் இனவாதத்தைக் கைவிடவில்லை – சிவாஜிலிங்கம்!

ஜே.பி.வியினர் இனவாதத்தை இன்னும் கைவிடவில்லை என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களுக்குப் பொருளாதார ரீதியாக மாத்திரமே பிரச்சினை உள்ளதாகவும், 13ஆம் திருத்தம் மற்றும் அதிகார பகிர்வு தொடர்பில் அங்குள்ள இளைஞர்கள் கவலைப்படவில்லை என ஜே.பி.வியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின்படி, ஓராண்டுக் காலம் அவகாசம் வழங்கி விசாரணைகளை மேற்கொள்வது என்பதை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

ஆகையால், இந்த பிரச்சினையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சர்வதேசத்திற்கு உதவத் தயாரில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது.

எனவே, ஜே.பி.வியினர் இனவாதத்தை இன்னும் கைவிடவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Check Also

அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் – ஜனாதிபதி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாதீட்டில் அரச பணியாளர்களுக்கான வேதனம் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார். …