டயனா கமகேவிடம் CID யினர் வாக்குமூலம் பதிவு!

0
14

உயர்நீதிமன்றினால் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

நேற்று முன்தினம் குறித்த வாக்குமூலத்தைப் பெற்றதாக காவல்துறைப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் வேறு ஆவணங்கள் தொடர்பிலும் இதன்போது டயனா கமகேவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.