இலங்கையைச் சேர்ந்த ரெப் பாடகர் வாகீஷன் தனது பாடல்களின் மூலம் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமடைந்தவர்.
இவர் பாடிய ரெப் பாடல்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்த நிலையில், ரெப் பாடகர் வாகீஷன் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மைனர்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வாகீஷன் அறிமுகமாகிறார்.
இத்திரைப்படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜனனி, நடிகர் சார்லி , மற்றும் செண்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இத்திரைப்படத்திற்கான பூஜை நிறைவடைந்துள்ள நிலையில், படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இத்திரைப்படத்திற்கு சூர்ய பிரசாத் ஆர் இசையமைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news
