நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான்

0
10

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகியுள்ள அந்த பதவிக்கு முஜிபுர் ரஹ்மானை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க சட்டரீதியாக தகுதியற்றவர் என இலங்கையின் உயர் நீதிமன்றம் நேற்று ( 08 ) அறிவித்தது.

இந்நிலையில், குறித்த வெற்றிடத்திற்கு முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டு, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட உள்ளதாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அதன்படி, முஜிபுர் ரஹ்மானை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.