நாம் தமிழர் கட்சிக்கு ‘கரும்பு விவசாயி’ சின்னம் தர மறுப்பு

0
17

கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கீடு செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம், தற்போது கர்நாடகாவை சேர்ந்த பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதை எதிர்த்து, கரும்பு விவசாயி சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் முன்னுரிமை அடிப்படையில், பாரதிய பிரஜா ஐக்கியதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தது.

பின்னர், இருதரப்பு வாதங்களையும் எழுத்து பூர்வமாக தாக்கல் செய்ய கூறி, வழக்கு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் உரிய விதிமுறைகளை பின்பற்றியே சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், மனுதாரர் கூறியபடி எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என்பதை நீதிமன்றம் உறுதி செய்ததுடன், நாம் தமிழர் கட்சி, பரிசீலனை செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்த உத்தரவை டெல்லி உயர்நீதிமன்றம் இணையத்தில் நேற்று பதிவேற்றம் செய்தது.

அதில், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கரும்பு விவசாயி சின்னம் கர்நாடகாவைச் சேர்ந்த கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து கரும்பு விவசாயி சின்னம் கோரி, சீமான் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கைக்கு கடத்த முயன்ற 2 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்