Saturday , 5 July 2025
இந்தியா

பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா

பாகிஸ்தானுக்கு பெண்களை வைத்து பதில் சொன்ன இந்தியா

காஷ்மீர் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில், ஆண்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

மேலும், இதில் கொல்லப்பட்ட சிலரின் வீட்டு பெண்கள் பயங்கரவாதிகள் தங்கள் மதத்தை கேட்டு சுட்டு கொன்றதாகவும், இந்தப் பயங்கரவாத தாக்குதல் பற்றி பிரதமர் மோடியிடம் போய் சொல்லுங்கள் என்று எச்சரித்ததாகவும் பேட்டிகளை கொடுத்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு முதலில் லஷ்கர் இ தொய்பாவின் மற்றொரு பிரிவான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் அமைப்பு பொறுப்பேற்றது. பின்னர் அதில் இருந்து தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பின்வாங்கியது.

இந்தத் தாக்குதலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த இந்தியா, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தியது. பாகிஸ்தானியர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்றியது.

விசாக்கள் ரத்து செய்யப்பட்டன.

இந்தியாவின் நடவடிக்கையைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவுடனான சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது.

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் முன்னதாக பேசிய, “இரு தேசக் கோட்பாடு முஸ்லிம்களும் இந்துக்களும் ஒன்று அல்ல, இரண்டு தனித்தனி நாடுகள் என்ற அடிப்படை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.

மதம், பழக்கவழக்கங்கள், மரபுகள், சிந்தனை மற்றும் அபிலாஷைகள் – வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் முஸ்லிம்கள் இந்துக்களிடமிருந்து வேறுபட்டவர்கள்” எனும் காணொளி வெளியாகி சர்ச்சை ஏற்படுத்தியது.

இலங்கையின் முக்கிய செய்திகள் – 08.05.2025 | Sri Lanka Tamil News

Check Also

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள்.   தேசிய மக்கள் சக்தி – 5,553 வாக்குகள் …