Friday , 20 June 2025
மண்டபம்

மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்து படகு மூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!

மண்டபம் ஏதிலிகள் முகாமில் இருந்து படகு மூலம் 9 பேர் நெடுந்தீவு வருகை!

தமிழகம் மண்டபம் ஏதிலிகள் முகாமிலிருந்து 9 பேர் படகு மூலம் நேற்று மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளனர்.

நெடுந்தீவு மேற்கு பனங்காணிப் பகுதியில் படகு மூலம் நேற்று மாலை வந்தடைந்தவர்கள், திருலிங்கபுரம் பகுதியில் உள்ள ஆலயத்தில் தங்கவைக்கப்பட்டு பின்னர் அனைவரும் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதன் பின்னர் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அனைவரும் மாவிலித்துறை பகுதியில் உள்ள தனியார் ஒருவரின் வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திருகோணமலை, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆண்கள், 3 பெண்கள், 3 சிறுவர்கள் என, 9 பேர் நேற்றைய தினம் காலை தமிழகத்தில் இருந்து புறப்பட்டு மாலை நெடுந்தீவை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள்

கொழும்பு மாவட்டம் – சீதாவக்கபுர நகர சபை தேர்தல் முடிவுகள்.   தேசிய மக்கள் சக்தி – 5,553 வாக்குகள் …