மத்திய வங்கி சேவையாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பில் வாத பிரதிவாதம்!

இலங்கை மத்திய வங்கி சேவையாளர்களது வேதன அதிகரிப்பு தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் தினேஸ் குணவர்த்தன, மத்திய வங்கி சேவையாளர்களது வேதனம் மற்றும் அதிகரித்த வேதன சதவீதம் என்பவற்றை நாடாளுமன்றில் முன்வைத்ததை அடுத்து வாத பிரதிவாதங்கள் வலுப்பெற்றன.

மத்திய வங்கியின் சேவையாளர்களது வேதனம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திலும் நிதி குழு கூட்டத்திலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர்.

மத்திய வங்கியின் பணியாளர் மட்ட 4 ஆம் வகுப்பு ஊழியர்களின் மொத்த வேதனம் 6,06,227 ரூபாயில் இருந்து 1,049,430 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அது 73.11 சதவீத அதிகரிப்பாகும்.

அத்துடன் பணியாளர் மட்ட சிறப்பு தர உதவி ஆளுநருக்கு 767,773 ரூபாயாக இருந்த வேதனம், புதிய வேதன அதிகரிப்பின் பிரகாரம் 1,267 ,170 ரூபாயாக உயரும்.

அது 76.79 சதவீத அதிகரிப்பாகும்.

இலங்கை செய்திகள் 07/03/2024

Check Also

ஹெலிகாப்டர்

ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி

ஹெலிகாப்டர் தரையில் விழுந்து நொறுங்கி விபத்து; 4 பேர் பலி ரஷியாவின் கிரோவ் மாகாணத்தில் இருந்து எம்.ஐ-2 என்ற ஹெலிகாப்டர் …