பருத்தித்துறையில் வாள் வெட்டு

0
24

உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள் வெட்டில் முடிவடைந்ததில் இளைஞன் ஒருவர் மணிக்கட்டுடன் கையை இழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, புலோலி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவரே மணிக்கட்டுடன் ஒரு கையை இழந்துள்ளார்.

புலோலி பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சந்தேகநபர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், தற்போது அவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர்.