Thursday , 24 April 2025

மே 1 முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் Debit, Credit அட்டை மூலம் பணம் செலுத்தலாம்

Spread the love

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது debit மற்றும் credit அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

கொட்டாவை மற்றும் கடவத்தை சந்திப்புகளில் இது ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Check Also

இலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News

Spread the loveஇலங்கையின் முக்கிய செய்திகள் – 24.04.2025 | Sri Lanka Tamil News