Saturday , 10 May 2025

யாழில் வீதியில் சென்ற மூதாட்டிக்கு காத்திருந்த அதிர்ச்சி

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் இடம்பெற்ற டிப்பர் விபத்தில் 82 வயது மூதாட்டியொருவர் பரிதாபகரமாக உயிரிழந்தார்.

வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிப்பர், திடீரென பயணித்தபோது, வீதியின் கரையாக நடந்துசென்ற மூதாட்டியை மோதியதுடன் அவர் மீது ஏறியுள்ளது. இதையடுத்து அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

33 வயதுடைய டிப்பர் சாரதி கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவரிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Check Also

அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கும் தேசிய மக்கள் சக்தி

நாடளாவிய ரீதியில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி 266 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன்படி, …