Sunday , 6 July 2025

வடகிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெறும் – சாணக்கியன்

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பட்டிருப்பு களுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலையில் இன்று (6) தனது வாக்கினை பதிவுசெய்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த சாணக்கியன், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது செல்வாக்கினை தமிழ் அரசு கட்சி காட்டியது. இந்த தேர்தலில் வடகிழக்கில் இலங்கை தமிழ் அரசு கட்சி அமோக ஆதரவுடன் வெற்றி பெறும் என்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் இன்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் ஏனைய அரசியல்வாதிகளும் பொதுமக்களும் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

இதேபோன்று பல்வேறு கட்சிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தமது வாக்குகளை பதிவுசெய்ததை காணமுடிகிறது.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …