வன்முறை சம்பவங்கள்- யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

0
3

வன்முறை சம்பவங்கள்- யாழ்ப்பாணத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையதாக கருதப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த மேலும் ஐந்து பேரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்கள், வர்த்தக நிலைய தீ வைப்புச் சம்பவங்களுடன் தொடர்புடைய 24 வயதான சந்தேகநபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணப் பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் உடுவில் பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடம் இருந்து மகிழுந்து, உந்துருளி, கைக்குண்டு மற்றும் வாள்கள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.

மீன்பிடிக்க சென்ற இருவர் மாயம்