Monday , 14 July 2025
நாட்டில்

வானிலை குறித்த அறிவித்தல்!

வானிலை குறித்த அறிவித்தல்!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை இன்று (2) முதல் குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

எனினும் மட்டக்களப்பு, அம்பாறை, முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், இரத்தினபுரி, காலி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்.

இதேவேளை, இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களைக் குறைப்பதற்குத் தேவையான பாதுகாப்பு முன்னாயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.

தாம்பரத்தில் நெல்லை விரைவு ரயில் பெட்டியில் சோதனை

வானிலை ,இரத்தினபுரி, காலி

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …