அனுரவால் தனியாக நாட்டை நடத்த முடியாது – ஹரிணி

Spread the love

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க திறமைசாலியாக இருந்தாலும் அவரால் மாத்திரம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் இன்று (19) இடம்பெற்ற பேரணியொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் கடந்த 75 வருடங்களாக ஆட்சியிலிருந்த எவரும் தேசிய மக்கள் சக்திக்கு அதிகாரம் கிடைக்கும் என நினைக்கவில்லை.

அந்த அதிகாரத்தை மக்கள் தமக்கு வழங்கியதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் மாத்திரம் இந்த நாட்டை கட்டியெழுப்புவது கடினம் எனவும் இம்முறை நல்லதொரு அணியை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது மக்களின் பொறுப்பு எனவும் பிரதமர் பிரதமர் ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டார்.

மேலும் நாட்டை மீட்பதற்கு வலுவான அமைச்சரவை மற்றும் முற்போக்கான நாடாளுமன்றம் அவசியம்.

எனவே நாட்டின் தரத்தை மாற்றியமைக்கும் குழுவொன்றை நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யும் சந்தர்ப்பம் தற்போது மக்களிடம் ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் தெரிவித்தார்.