உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) வழங்கப்பட்ட 2024ஆம் ஆண்டிற்கான உலக புகைத்தல் தடுப்பு தினத்திற்கான விருது இலங்கைக்கு கிடைத்துள்ளது. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்திற்கு குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.
விகாரமஹாதேவி பூங்காவில் நேற்று (07) நடைபெற்ற உலக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்விலேயே இந்த விருது வழங்கி வைக்கப்பட்டது.