ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அன்ட்ரே ப்ரென்ச் (Marc-Andre Franche) மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (22) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கென வழங்கப்படும் ஐக்கிய நாடுகளின் ஒத்துழைப்புக்களை மார்க் அன்ட்ரே ப்ரென்ச் உறுதிப்படுத்தினார்.
அத்துடன், இலங்கையின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தலுக்கான திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்புகளை வழங்கியுள்ளது.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் மகளிருக்கான ஊக்குவிப்பு வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்புகளை வழங்க ஆர்வமுடன் இருப்பதாக மார்க் அன்ட்ரே ப்ரென்ச் தெரிவித்துள்ளார்.