Friday , 4 July 2025
ஒன்று கூடலுக்கு தடை. உள்துறை அமைச்சு.

ஒன்று கூடலுக்கு தடை. உள்துறை அமைச்சு.

நாளை (07/07) பிரான்சில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாவது இறுதி சுற்று நடைபெற உள்ளது.

இதில் தீவிர வலதுசாரிகள் பெரும்பான்மை பலத்தை பெறாவிடினும் அதிக ஆசனங்கள் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் நாட்டில் அசம்பாவிதங்கள், கலவரங்கள் இடம் பெறலாம் என புலனாய்வுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ள நிலையில், நாடு பூரண பாதுகாப்பு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளது.

இன்று 06/07 நள்ளிரவில் இருந்து நாடுமுழுவதும் சுமார் 30,000 காவல்துறையினரும், Gendarmerie பாதுகாப்பு படையினரும், GIGN இராணுவ பாதுகாப்பு வீரர்களும் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

தலைநகரம் Parisல் மட்டும் வளமையான காவல்துறையினரை விட சுமார் 5,000 காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளனர்.

பிரான்ஸ் தேசத்தில் நாளை வெளியே ஒன்று கூடல் ஊர்வலங்கள் என்பன தடை செய்யப்பட்டுள்ளது சிறப்பாக கடல் கடந்த மாவட்டங்களில் பூரண பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன சிறப்பாக கடந்த சில மாதங்கள் தொட்டு கலவர பூமியாக இருந்து வருகின்றது Nouvelle-Calédonieல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Check Also

பாகிஸ்தானியர்கள்

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன?

பாகிஸ்தானியர்கள் கூகுளில் அதிகம் தேடியது என்ன? உலகில் எது நடந்தாலும், நாம் இன்று உடனே என்ன நடக்கிறது என கேட்கும் …